For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்வளவு தான் என் கிரிக்கெட் பயணம்.. தோனி தானே வெளியிட்ட ஓய்வு வீடியோ.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்!

சென்னை : கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்தார்.

Recommended Video

Dhoni's emotional retirement video on Instagram

தோனியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகை அதிர வைத்தது. அவர் ஓய்வு அறிவிப்புடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தோனியின் ஒட்டு மொத்த கிரிக்கெட் வாழ்வும் அடங்கி உள்ளது. அதன் இறுதி வினாடிகள் ரசிகர்களை கண்கலங்க வைப்பதாக உள்ளது.

தோனியின் ஓய்வு அறிவிப்பு... கோலி நெகிழ்ச்சி.. சிரம் தாழ்ந்த மரியாதை செலுத்துவதாக பதிவுதோனியின் ஓய்வு அறிவிப்பு... கோலி நெகிழ்ச்சி.. சிரம் தாழ்ந்த மரியாதை செலுத்துவதாக பதிவு

தோனியின் பயணம்

தோனியின் பயணம்

தோனி 2004இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 2007இல் இந்திய அணியின் கேப்டன் ஆனார். பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென 2014இல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20யில் ஆடி வந்தார்.

ஓய்வு

ஓய்வு

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வந்த தோனி திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராமில் தோனி வெளியிட்ட பதிவில் "உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்"என கூறி இருந்தார். அத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்து இருந்தார்.

பாடல்

பாடல்

அந்த வீடியோவில் தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் அத்தனை முக்கிய தருணங்களையும் புகைப்படமாக பகிர்ந்து இருந்தார். பின்னணியில் அமிதாப் பச்சன் நடித்த "கபி கபி" திரைப்படத்தில் இருந்து "மேய்ன் பல் தோ பல் கா ஷயார் ஹுன்" என்ற பாடல் ஒலித்தது. அந்த வீடியோ, தோனி விக்கெட் கீப்பராக இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆன காட்சியில் இருந்து துவங்குகிறது.

ரன் அவுட் முதல்..

ரன் அவுட் முதல்..

தன் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆன காட்சியும், அதன் பின் தோனி பாகிஸ்தான் தொடரில் பங்கேற்று தன் முதல் சதம் அடிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. அடுத்து 2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக தோனி டக் அவுட் ஆன காட்சியும், அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று உலகக்கோப்பை குரூப் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து தோனியின் உருவப்படம் எரிக்கப்பட்ட காட்சியும் இடம் பெற்றுள்ளது.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

அடுத்து 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பெற்றது, பல முக்கிய தொடர்களின் வெற்றிகள் இடம் பெற்றுள்ளன. தன்னுடன் ஆடிய மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றதை ஆங்காங்கே நினைவு கூர்ந்துள்ளார் தோனி.

நினைவு கூர்ந்த தோனி

நினைவு கூர்ந்த தோனி

டிராவிட், அனில் கும்ப்ளே, கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன், ஜாகிர் கான், சச்சினின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஓய்வு, நெஹ்ரா, சேவாக், ஹர்பஜன் சிங், கம்பீர், யுவராஜ் சிங் என பலரையும் நினைவு கூர்ந்துள்ளார். அடுத்து தன் டெஸ்ட் ஓய்வையும் குறிப்பிட்டு இருக்கிறார் தோனி.

யுவராஜ் சிங் நட்பு

யுவராஜ் சிங் நட்பு

யுவராஜ் சிங் உடனான நட்பை ஆங்காங்கே வெளிப்படுத்தி உள்ளார் தோனி. பல முக்கிய வெற்றிகளை இருவரும் சேர்ந்தே எட்டியதை நினைவு கூர்ந்துள்ளார். அதன் பின் ரெய்னாவையும் மறக்காத அவர், கேப்டனாக தன் கடைசி ஒருநாள் போட்டியை காட்சிப்படுத்தி உள்ளார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அதன் பின் ஒரு வீரராக இளம் வீரர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. புவனேஸ்வர் குமார், ரோஹித் சர்மா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார். கோல்ப் விளையாட்டின் மீதான ஆர்வம் குறித்தும் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

2019 உலகக்கோப்பை

2019 உலகக்கோப்பை

இந்திய அணியில் தானும் ஒரு வீரராக மாறியதை குறிப்பிட்டு அணியுடன் இருக்கும் புகைப்படத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார் தோனி. 2019 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய வீரர்களுடன் நேரத்தை செலவிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உருக வைக்கும் காட்சி

உருக வைக்கும் காட்சி

கடைசியாக 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் ரன் அவுட் ஆகும் காட்சியும், அதன் பின் கண் கலங்கி வெளியேறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த இடம் தான் ரசிகர்களை உருக வைப்பதாக உள்ளது. அதன் பின் தோனி இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் அமர்ந்து இருக்கும் காட்சி அவர் தன் ஓய்வு ,முடிவை அப்போதே எடுத்து விட்டதை காட்டுவதாக உள்ளது.

ஓய்வு முடிவை அப்போதே எடுத்த தோனி

ஓய்வு முடிவை அப்போதே எடுத்த தோனி

கடைசியாக தன் பேட், உடை, கிளவுஸ் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை புகைப்படம் எடுத்து வைத்துள்ளதையும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தி இருக்கிறார் தோனி. அது அவரது ஓய்வையே குறிக்கிறது. இறுதியாக தோனி தன் இந்திய அணி உடையுடன் படுத்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கடைசி சில வினாடிகள் தோனியின் ரசிகர்களை கலங்க வைக்கிறது.

Story first published: Sunday, August 16, 2020, 0:11 [IST]
Other articles published on Aug 16, 2020
English summary
Dhoni retirement : Dhoni announced retirement from International cricket on Independence day
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X