For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் செய்யாத சாதனை.. இதை செய்த ஒரே கேப்டன் தோனி மட்டும் தான்!

சென்னை : தோனியின் மலைக்க வைக்கும் சாதனைகள் குறித்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.

Recommended Video

Dhoni retirement : Dhoni’s records in international cricket

இந்திய கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

அவரது சாதனைப் பட்டியல் மிகவும் பெரிது. அதிலும் அவர் செய்த சில சாதனைகள் பெரும் வியப்பை அளிக்கக் கூடியது.

சுதந்திர தினத்தில் சுதந்திர தினத்தில் "1929 மணிக்கு" ஓய்வை அறிவித்தார் தோனி.. கண்கலங்கிய ரசிகர்கள்!

2019 உலகக்கோப்பை

2019 உலகக்கோப்பை

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அப்போது அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20யில் தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஓய்வை அறிவித்தார்

ஓய்வை அறிவித்தார்

அப்போது ஓய்வை அறிவிக்காத தோனி 2020 ஐபிஎல் தொடருக்கு முன் தன் ஓய்வை அறிவித்தார். அதுவும் சுதந்திர தினத்தன்று அறிவித்தார். அதைக் கண்ட அவரது ரசிகர்கள் தங்களின் அடக்க முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தோனியின் சாதனைகளை பட்டியலிட்டு, அவர் பெருமைகளை குறிப்பிட்டு ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

யாரும் செய்யாத சாதனை

யாரும் செய்யாத சாதனை

டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) என மூன்று ஐசிசி ட்ராபிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இது கிரிக்கெட் உலகில் யாருக்கும் கிடைக்காத பெருமை ஆகும். முதல் டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டனும் தோனி தான்.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்

2009இல் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதன்முறையாக முதல் இடத்தை பிடித்தது. அந்த சாதனையும் தோனி கேப்டன்சியில் தான் வந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையாமல் தொடர்ந்து 11 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தினார்.

ரன்கள்

ரன்கள்

321 ஒருநாள் போட்டிகளில் 10046 ரன்களும், 93 டி20 போட்டிகளில் 1487 ரன்களும் குவித்துள்ளார் தோனி. 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களுக்கும் மேல் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் அவர்தான்.

அதிவேக சதம்

அதிவேக சதம்

தோனி தன் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். அதுவே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிவேக சதம் ஆகும். சர்வதேச அளவில் அது நான்காவது அதிவேக சதம் ஆகும்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 788 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான தோனி அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அதே சமயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் பட்டியலில் 178 ஸ்டம்பிங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

தோனியின் அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்கள் தான் ஒருநாள் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 200 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ள தோனி அதில் 110 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங்கிற்கு பின் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் தோனி தான்.

Story first published: Saturday, August 15, 2020, 23:34 [IST]
Other articles published on Aug 15, 2020
English summary
Dhoni retirement : Dhoni’s records in international cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X