பாராட்டுக்காகத் தான் ஏங்குகிறோம்.. பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன தோனி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார்.

Dhoni Retirementக்கு பிறகும் வரப்போகும் வருமானம் | Oneindia Tamil

அவரது ஓய்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட பாராட்டு மடல் ஒன்றை எழுதி இருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தோனி. ஒரு விளையாட்டு வீரர் பாராட்டுக்காக ஏங்குவார் என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் புறப்பட்டாச்சு... ராஜஸ்தான் ராயல்ஸ் ரெடியாயிட்டாங்க...

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள தோனி சென்னையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்தார். அங்கே ஆகஸ்ட் 15 அன்று தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மோடி பாராட்டு

மோடி பாராட்டு

பலரும் தோனியை வாழ்த்தி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு பக்கத்திற்கு தோனி குறித்து பாராட்டி, அவரது தியாகங்களை குறிப்பிட்டு வாழ்த்தி இருந்தார். தோனியின் 2011 உலகக்கோப்பை வெற்றி குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்

மேலும், தோனி சாதாரண குடும்பத்தில் இருந்து இத்தனை தூரம் உயர்ந்ததையும் குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் வாழ்த்தி இருந்தார். பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு தோனி தற்போது நன்றி கூறி உள்ளார்.

நரேந்திர மோடிக்கு நன்றி

நரேந்திர மோடிக்கு நன்றி

தோனி ட்விட்டரில் மோடியின் பாராட்டு மடலை பகிர்ந்து, "ஒரு கலைஞன், வீரன், விளையாட்டு வீரன் தங்கள் கடின உழைப்பு மற்றும் தியாகத்தை அனைவரும் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என ஏங்குவார்கள். வாழ்த்து மற்றும் பாராட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என கூறி உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni retirement : Dhoni thank PM Modi for his appreciation and wishes for his retirement. Dhoni pointed out that An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation in his thanking tweet.
Story first published: Thursday, August 20, 2020, 17:37 [IST]
Other articles published on Aug 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X