தோனி ஓய்வு : இப்படியா வீட்டுல உட்கார்ந்துகிட்டு அறிவிப்பாங்க? முன்னாள் பாக். கேப்டன் கடும் விமர்சனம்

கராச்சி : முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தோனிக்கு வாழ்த்து கூறி விடை கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்

அவர் வீட்டில் இருந்து கொண்டு ஓய்வை அறிவித்து இருக்கக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அதிரடியாக விமர்சித்துள்ளார்.

தான் இதே விஷயத்தை சச்சினிடமும் கூறி இருக்கிறேன் என்று அது பற்றியும் கூறினார்.

தோனியோட ஜெர்சி எண். 7... மத்த யாரையும் அந்த நம்பர்ல பாக்க முடியாது... ரசிகர்கள் திட்டவட்டம்

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

2020 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்த தோனி சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்தார். ஆகஸ்ட் 15 அன்று முதல் நாள் பயிற்சியில் பங்கேற்ற அவர் அன்று இரவு 7.29 மணிக்கு தான் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்தார்.

16 வார்த்தைகள்

16 வார்த்தைகள்

தோனி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் 16 வார்த்தைகளே இடம் பெற்று இருந்தன. 16 வருட கிரிக்கெட் வாழ்வை 16 வார்த்தைகளில் முடித்துக் கொண்டார் தோனி. அவரது எளிமை குணம் இதிலும் வெளிப்பட்டது. அதே சமயம், ரசிகர்கள் அவரது முடிவால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஃபேர்வெல் போட்டி

ஃபேர்வெல் போட்டி

சுரேஷ் ரெய்னாவும் தோனியின் வழியில் ஓய்வை அறிவித்து அதிர வைத்தார். தோனி ஓய்வை அறிவித்தாலும், தோனி ரசிகர்கள், தோனியின் மாநிலமான ஜார்கண்ட்டின் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என பிசிசிஐ-யிடம் வற்புறுத்து வருகின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தோனி போன்ற ஜாம்பவான் வீரர் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வை அறிவிக்கக் கூடாது என விமர்சனம் செய்துள்ளார். அவர் களத்தில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள்

கோடிக்கணக்கான ரசிகர்கள்

இது குறித்து இன்சமாம் உல் ஹக் தன் யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரை களத்தில் காண விரும்புகிறார்கள்." என்றார்.

வீட்டில் அமர்ந்து கொண்டு..

வீட்டில் அமர்ந்து கொண்டு..

மேலும், "என் கருத்துப்படி, இப்படி ஒரு மதிப்பை கொண்ட வீரர் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வை அறிவிக்கக் கூடாது. அவர் களத்தில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்க வேண்டும்" என நேரடியாக விமர்சனம் செய்தார் இன்சமாம் உல் ஹக்.

பெரிய ரசிகர் கூட்டம்

பெரிய ரசிகர் கூட்டம்

"இதே விஷயத்தை தான் நான் ஒருமுறை சச்சினிடம் கூறினேன். உங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் நீங்கள் களத்தில் தான் உங்கள் பயணத்தை முடிக்க வேண்டும். அதே மைதானத்தில் தான் உங்களுக்கு மரியாதை மற்றும் ரசிகர்கள் கிடைத்தார்கள்." என விளக்கினார் இன்சமாம்.

மகிழ்ந்து இருப்பேன்

மகிழ்ந்து இருப்பேன்

"என் கருத்துப்படி தோனியும் அதே விஷயத்தை செய்து இருக்கலாம். அதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். நானும் கூட மகிழ்ந்து இருப்பேன். ஏனெனில், நான் அவரை சிறந்த இந்திய கேப்டனாக மதிப்பிட்டு இருக்கிறேன்" என்றார் இன்சமாம்.

சிறந்த வீரர்களை உருவாக்கினார்

சிறந்த வீரர்களை உருவாக்கினார்

அதே வீடியோவில் தோனி தான் சுரேஷ் ரெய்னா மற்றும் அஸ்வினை சிறந்த வீரர்களாக உருவாக்கினார் எனவும், அவர் இந்த விளையாட்டை புரிந்து கொண்ட அளவு மிகவும் அதிகம் என்றும் கூறி தோனியை பாராட்டி இருக்கிறார் இன்சமாம் உல் ஹக்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni retirement : Inzamam Ul Haq says Dhoni shouldn’t have retired from Home. He said Dhoni should retired from ground as he has millions of fans across the globe.
Story first published: Monday, August 17, 2020, 11:26 [IST]
Other articles published on Aug 17, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X