For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிஆர்எஸ் கில்லாடி.. எதிரணியை கண்டு அஞ்சாதவர்.. தோனியை பாராட்டித் தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்!

கராச்சி : தோனி ஓய்வு அறிவித்ததை அடுத்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தோனிக்கு வாழ்த்து கூறி விடை கொடுத்துள்ளனர்.

Recommended Video

Dhoni retirement : Dhoni’s records in international cricket

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த பின் இந்தியா முழுவதும் புகழ் பெற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி தான் காரணம்.

தோனி கிரிக்கெட் ஆடத் துவங்கிய முதல் சில வருடங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் குவித்த வெற்றிகள் தான் அவரை பிரபலம் ஆக்கியது.

7.29 மணி, தோனி சொன்ன ரகசியம்.. இதுதான் அர்த்தமா? இதுக்குத்தான் நன்றி சொன்னீங்களா? ரசிகர்கள் உருக்கம்7.29 மணி, தோனி சொன்ன ரகசியம்.. இதுதான் அர்த்தமா? இதுக்குத்தான் நன்றி சொன்னீங்களா? ரசிகர்கள் உருக்கம்

அறிமுகம்

அறிமுகம்

2004இல் தோனி இந்திய அணிக்கு நுழையும் முன் இந்தியா ஏ அணியில் ஆடி வந்தார். அப்போது பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடிய பின் இந்திய அணிக்குள் நுழைந்தார். அவரது முதல் தொடர் வங்கதேச அணிக்கு எதிரானது.

முதல் சதம்

முதல் சதம்

தன் முதல் தொடரில் தோனி சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், அடுத்து அவர் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அதிரடி சதம் அடித்து தனி ஆளாக இந்திய அணியை வெல்ல வைத்தார். சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் என ஜாம்பவான்கள் இருந்த போது தோனி ஆடிய ஆட்டம் ரசிகர்களை மலைக்க வைத்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக..

பாகிஸ்தான் அணிக்கு எதிராக..

அதன் பின்னும் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர்களில் தோனி ரன் குவித்து பல போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்தார். அதைத் தொடர்ந்தே தோனி இந்தியாவின் ஹீரோ ஆனார். இந்த நிலையில் தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வாழ்த்து கூறி உள்ளனர்.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம் கூறுகையில், எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஓய்வு பெற்றுள்ளார். அவர் வந்தார், ஆடினார், கைப்பற்றினார். டி20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றார். எதிரணியை கண்டு அஞ்சாத அவரது அதிரடி ஸ்டைல் எனக்கு பிடிக்கும். வாழ்க்கையில் என்ன செய்தாலும் சிறப்பாக செய்யுங்கள் மாஹி என வாழ்த்தி இருக்கிறார்.

சோயிப் அக்தர்

சோயிப் அக்தர்

சோயிப் அக்தர் கூறுகையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் இல்லாமல் கிரிக்கெட்டின் கதையை எழுத முடியாது என குறிப்பிட்டுள்ளார். சிட்ரா நவாஸ் கூறுகையில், உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் என பாராட்டி உள்ளார்.

ரமீஸ் ராஜா

ரமீஸ் ராஜா

ரமீஸ் ராஜா கூறுகையில், பெரிய தலைவர், பெரிய சாதனைகள், சிறந்த என்டர்டெய்னர், டிஆர்எஸ்-ஐ கணிப்பதில் உலகிலேயே சிறந்தவர். அதை எல்லாம் விட இந்திய கிரிக்கெட்டின் முக்கிய தருணங்களில் அவர் முன்னிலையில் இருப்பார் என கூறி உள்ளார்.

பைசல் இக்பால்

பைசல் இக்பால்

பைசல் இக்பால் கூறுகையில், இந்தியாவின் சிறந்த தூதர். களத்தில் அவருடனான மோதலை எப்போதும் ரசித்து இருக்கிறேன். குறிப்பாக ஸ்டம்ப்புக்கு பின் உங்கள் பேச்சை.. எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

கம்ரான் அக்மல்

கம்ரான் அக்மல்

கம்ரான் அக்மல் கூறுகையில், பலருக்கு நீங்கள் உந்துதலாக இருந்துள்ளீர்கள். இந்தியாவின் சிறந்த ஆட்டக்காரராக இருந்தீர்கள். உங்கள் கேப்டன்சியில் இந்தியா பல பெருமைமிக்க கோப்பைகளை வென்றது. உங்களுடன் ஆடியதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் கண்ணியமான, அடக்கமான மனிதர் என பாராட்டி உள்ளார்.

ஷாஹித் அப்ரிடி

ஷாஹித் அப்ரிடி

ஷாஹித் அப்ரிடி கூறுகையில், இந்திய கிரிக்கெட்டின் உண்மையான ஜாம்பவான்களில் ஒருவர். சிறந்த கேப்டன்களில் ஒருவர். தோனி உங்கள் சிறந்த கிரிக்கெட் கேரியருக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

Story first published: Sunday, August 16, 2020, 12:00 [IST]
Other articles published on Aug 16, 2020
English summary
Dhoni retirement : Pakistan players reaction to Dhoni’s retirement. It is to be noted that Dhoni gained fame by conquering Pakistan in the early days of his career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X