வாவ்..! ஹீரோ போன்ற லுக்கில் எம்.எஸ்.தோனி.. டைல், சைட் கட் என அசத்தல் ஹேர்ஸ்டைல்.. வைரல் - புகைப்படம்

ராஞ்சி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி திரைப்பட ஹீரோக்களை போன்று காட்சியளிக்கும் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத வீரர், எம்.எஸ்.தோனி. இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தோனியின் ஃபினிஷிங், ஹெலிகாப்டர் ஷாட், கீப்பிங்கினை தாண்டி அவரின் ஹேர்ஸ்டைலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நீளமான முடி

நீளமான முடி

தோனியின் ஹேர்ஸ்டைலை பார்த்து அதே போன்ற ஹேர்ஸ்டைல்கள் வேண்டும் என முடித்திருத்துபவர்களிடம் அடம்பிடிக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு தனது முடி அலங்காரத்தில் முக்கியத்துவம் கொடுப்பார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நீண்ட முடியுடன் தோற்றமளித்தார். அந்த ஹேர்ஸ்டைல் அப்போது செம வைரலானதால், அதே ஹேர் ஸ்டைலைத்தான் அடுத்த பல ஆண்டுகளுக்கு அவர் வைத்திருந்தார்.

தனி கவனம் பெறும்

தனி கவனம் பெறும்

அதன்பின்னர் தனது முடியை ஷார்ட்டாக வெட்டி, ஒவ்வொரு தொடருக்கும், ஒவ்வொரு ஹேர்ஸ்டைல் என வித்தியாசம் காட்டி வருகிறார். போட்டிகளின் போது அவரின் முடியும் அந்த அளவிற்கு கவனிக்கப்படும். அந்தவகையில் சமீபத்தில் முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வந்தது.

புது ஹேர்ஸ்டைல்

புது ஹேர்ஸ்டைல்

இந்நிலையில் தற்போது அவர் புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இரண்டு தலையின் பக்கங்களிலும் நன்கு முடியை ஷார்ட்டாக வெட்டிக்கொண்டு திரைப்பட ஹீரோவை போன்று காட்சியளிக்கிறார். குறிப்பாக தோனிக்கு மிகவும் விருப்பமான டெயிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

தோனி ஹீரோக்களை போன்று காட்சியளிப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர் முடி வெட்டிய இடம் தான். மும்பையில் அலீம் ஹக்கீம் என்ற பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட் உள்ளார். பாலிவுட் நடிகர்களான சஞ்சய் தத், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் ஹேர் ஸ்டைல் செய்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. தற்போது தோனியின் அதே ஹேர்ஸ்டைலிஸ்டிடம் தான் தனது புதிய ஸ்டைலை செய்துகொண்டிருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK Skipper Dhoni's new hairstyle look pictures blows up social media
Story first published: Friday, July 30, 2021, 17:23 [IST]
Other articles published on Jul 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X