For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் டைமிங் "ஐடியா".. அடுத்த நிமிடம் புது சூப்பர் ஸ்டாரையே இழந்த கேகேஆர்.. மாஸ்

அபுதாபி: மும்பை பவுலர்களுக்கே செம டஃப் கொடுத்த கொல்கத்தா அணியின் ரைஸிங் ஸ்டார் வெங்கடேஷ் ஐயரை எந்தவித சிக்கலுமின்றி அலேக்காக தூக்கியுள்ளது சிஎஸ்கே

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.26) டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

'டாஸ் தோற்றது நமக்கு அடிச்ச லக்’ - வீரர்களுக்கு தோனி சைலண்ட் சிக்னல்.. முதல் ஓவரிலேயே செம ரிசல்ட்'டாஸ் தோற்றது நமக்கு அடிச்ச லக்’ - வீரர்களுக்கு தோனி சைலண்ட் சிக்னல்.. முதல் ஓவரிலேயே செம ரிசல்ட்

 டிரை பிட்ச்

டிரை பிட்ச்

அதே சமயம், சென்னை அணியில் காயம் காரணமாக பிராவோவுக்கு பதிலாக சாம் கர்ரன் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டி அபுதாபியில் நடைபெறும் நிலையில், அதுவும் நல்ல உச்சி வெயிலில் நடைபெறுவதால், பிட்ச் பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என்பதால் தான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்படியும் இந்த டிரை பிட்சில் நன்றாக விளையாடினால் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். கொல்கத்தா அதைத் தான் டார்கெட் செய்கிறது.

 ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்

இந்நிலையில், கொல்கத்தா அணியில் முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்துள்ளது. தவறான புரிதல் காரணமாக கில் 9 ரன்களில் அம்பதி ராயுடுவால் ரன் அவுட் செய்யப்பட்டார். பிறகு, இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அறிமுக வீரராக களமிறங்கி, எதிரணிகளுக்கு பெரும் குடைச்சல் கொடுத்த வந்த வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களில் தாகூர் ஓவரில் கேட்ச்சாகியுள்ளார். இது கேகேஆரின் மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காரணம், கைலே ஜேமிசன், ட்ரெண்ட் போல்ட் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கூட, மிக மிக சாதாரணமாக டீல் செய்து மற்ற அணிகளை வியக்க வைத்தவர் வெங்கடேஷ்.

 தோனி வியூகம்

தோனி வியூகம்

6 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட வெங்கடேஷ், சென்னை அணியின் மீடியம் ஃபேஸ் பவுலர்களை நிச்சயம் சுளுக்கெடுப்பார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், தோனியின் ஐடியா வேறு மாதிரியாக இருந்தது. டீம் டிஸ்கஷனுக்கு முன்பே, வெங்கடேஷின் பேட்டிங்கை கண்டு வியந்த தோனி, சக வீரர்களிடம் அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். குறிப்பாக, வெங்கடேஷின் பல ஷாட்ஸ் யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்துவதாக தோனி பாராட்டியிருக்கிறார். அதேசமயம், வெங்கடேஷின் லூப் ஹோல்ஸ்களையும் தோனி கண்டறிந்த, அதைத் தான் அணி மீட்டிங்கில் கூறியிருக்கிறார்.

 நிச்சயம் சிக்குவார்

நிச்சயம் சிக்குவார்

அதாவது, 'வெங்கடேஷின் பேட்டிங் டைமிங் மிக பெர்ஃபெக்ட்டாக உள்ளது. ஸோ, மணிக்கு 150 கி.மீ வேகத்தில் அவருக்கு வீசினாலும், அதை மணிக்கு 180 கி.மீ வேகத்தில் அவர் சிக்சருக்கு திருப்பிவிடுவார். அவரிடம் பல வெரைட்டி ஷாட்ஸும் இருக்கிறது. நீங்கள் அவ்வளவு அருமையாக பவுன்ஸ் போட்டாலும், அவரது உயரத்துக்கு அது நார்மல் டெலிவரி தான். கடாசி விடுவார். ஸோ, அவருக்கு முடிந்த அளவு வெரைட்டியான பந்துகளை வீசுங்கள். குறிப்பாக ஸ்லோ பால் அதிகம் வீசுங்கள். அதில் அவர் நிச்சயம் சிக்குவார்" என்பதே தோனியின் ஆலோசனையாக இருந்திருக்கிறது.

 வெங்கடேஷ் அவுட்

வெங்கடேஷ் அவுட்

இந்த நிலையில் தான் தாகூர் வீசிய மிக ஆவரேஜான பந்தில் வெங்கடேஷ் அவுட்டாகி இருக்கிறார். லைன் அன்ட் லெந்த் எதுவும் இல்லாத, தோனி சொன்னது போல், ஒரு யூஷுவல் பந்தாக இல்லாமல், ஆஃப் ஸ்டெம்புக்கு ரொம்பவும் வெளியே, அதே சமயம் வெங்கடேஷின் இடுப்புக்கு சற்று கீழே போடப்பட்ட பந்து. அவ்வளவு வெளியே சென்ற பந்தை, அடிக்க வேண்டும் என்ற வேகத்தில் மெனக்கெட்டு சென்று தொட்டு, எட்ஜ் ஆகி அவுட்டாகியுள்ளார் வெங்கடேஷ்.

இதனால் தான் தோனி இன்னும் "தல"யாக இருக்கிறார் போல!

Story first published: Sunday, September 26, 2021, 17:29 [IST]
Other articles published on Sep 26, 2021
English summary
Dhoni's plan to got out smasher venkatesh iyer ipl - தோனி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X