For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் 7:29 ரகசியம்.. ஓய்வு அறிவிப்பில் மறைந்திருந்த சுவாரஸ்ய விஷயங்கள்.. உண்மை விவரங்கள்!

சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 7.29 மணி என்ற ரகசிய காரணம் மூலம் தான் தனது ஓய்வை அறிவித்தார்.

தோனியின் 40 வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் இணையத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு மறக்கமுடியாத தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்த தோனி, தனது ஓய்வு பற்றிய அறிவிப்பையும் சற்று சுவாரஸ்யமாகவே கொடுத்தார்.

வரலாற்றில் எழுதுங்கள்.. தோனி என்ற ஒரே ஒருவருக்காக நடந்த அந்த சம்பவம்.. ஆடிப்போன இங்கிலாந்து வீரர்கள் வரலாற்றில் எழுதுங்கள்.. தோனி என்ற ஒரே ஒருவருக்காக நடந்த அந்த சம்பவம்.. ஆடிப்போன இங்கிலாந்து வீரர்கள்

தோனி ஓய்வு அறிவிப்பு

தோனி ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென தனி வழி ஏற்படுத்தி, அதில் வெற்றிகரமாக பயணித்து காட்டியவர் தோனி. இந்திய அணியின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை, நினைவாக்கி காட்டியவர். கிரிக்கெட்டில் கேப்டன் என்றவுடன் நினைவுக்கு வரும் தோனி, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 7.29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார்.

குழப்பம்

குழப்பம்

தோனியின் அந்த இன்ஸ்டா பதிவு ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது. அந்த வீடியோ பதிவில், நான் 19.29 மணியுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் எனக்குறிப்பிட்டிருந்தார். சரியாக ஏன், 19.29 மணிக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும். அதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

ரகசியம்

ரகசியம்

2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி தான் அதற்கு காரணம். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அந்த போட்டியில் மார்டன் கப்தில், தோனியை ரன் அவுட் ஆக்கினார். அந்த தருணம் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. இறுதியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி அதிகாரப்பூர்வமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. அப்போது இங்கிலாந்தில் நேரம் சரியாக 19.29 ஆகும். தோனி விளையாடிய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அதுவே.

 அமிதாபச்சன் பாடல்

அமிதாபச்சன் பாடல்

இந்தியாவுக்காக மீண்டும் உலகக்கோப்பையை வென்று தர தவறிய 19.29 என்ற அந்த நேரத்திலேயே நான் விடைபெறுகிறேன் என தோனி மறைமுகமாக தெரிவித்திருந்தார். மற்றொரு புறம் தோனியின் ஓய்வு அறிவிப்பு வீடியோவில், 1976ம் ஆண்டு அமிதாபச்சன் நடிப்பில் வெளியான கபிகபி படத்தில் வரும் மேன் பால் டோ பா என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது பேசுப்பொருளானது.

உதாரணம்

உதாரணம்

தோனி அமிதாபச்சனின் தீவிர ரசிகர் ஆவார். அவர் ஓய்வு பெற்ற போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்ந்தனர். ஆனால் அவர் மூன்றே 3 பேரை தான் பின் தொடர்ந்தார். அது மனைவி சாக்‌ஷி, மகள் ஜீவா மற்றும் அமிதாபச்சன் மட்டுமே. எனவே அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதை வைத்துள்ளார். இந்திய அணியின் கனவுகளை நினைவாக்கிய தோனி, மிகவும் எளிமையாக ஓய்வை அறிவித்தார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Story first published: Wednesday, July 7, 2021, 16:26 [IST]
Other articles published on Jul 7, 2021
English summary
Former Captain MS Dhoni's Secret behind The retirement time of '19.29'
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X