தோனியின் முதல் இடத்தை காலி செய்த இங்கிலாந்து கேப்டன்.. சிக்ஸர் அடிப்பதில் உலக சாதனை!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் இயான் மார்கன் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சதம் குவித்தார்.

இந்தப் போட்டியில் 4 சிக்ஸர் விளாசிய இயான் மார்கன் தோனியின் சாதனை ஒன்றை முறியடித்தார்.

மேலும் ஒட்டுமொத்த சிக்ஸர்கள் அடித்த பட்டியலிலும் வேகமாக முன்னேறி வருகிறார் இயான் மார்கன்.

வார்னர், வில்லியம்சன் சிறந்த பீல்டர்கள் இல்லை... மிகச்சிறந்த பீல்டர்கள்... பிஜூ ஜார்ஜ்

மூன்றாவது ஒருநாள் போட்டி

மூன்றாவது ஒருநாள் போட்டி

இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட்களை இழந்த போதும் கேப்டன் இயான் மார்கன் அதிரடி ஆட்டம் ஆடினார். 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையிலும் அவரது ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் எகிறியது.

இயான் மார்கன் சதம்

இயான் மார்கன் சதம்

டாம் பான்டன் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வேகமாக ரன் குவித்தார். இயான் மார்கன் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த அவர் 84 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் தன் ஆட்டத்தில் 15 ஃபோர், 4 சிக்ஸ் அடித்தார்.

அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

இயான் மார்கன் கேப்டனாக தன் 212 சிக்ஸரை இந்த போட்டியில் கடந்தார். அதன் மூலம் ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை முந்தி முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்தார்.

தோனி சாதனை முறியடிப்பு

தோனி சாதனை முறியடிப்பு

தோனி கேப்டனாக 332 போட்டிகளில் 211 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். தற்போது வெறும் 163 போட்டிகளில் இயான் மார்க்கன் தோனியின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

இதே பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் 171 சிக்ஸர்கள் அடித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் 121 போட்டிகளில் 170 சிக்ஸர்கள் அடித்து நான்காம் இடத்தில் இருக்கிறார்.

தோனியை முந்துவார்

தோனியை முந்துவார்

ஒட்டு மொத்த சர்வதேச போட்டி சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இயான் மார்கன் மிக வேகமாக முன்னேறி வருகிறார். விரைவில் தோனியை முந்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயான் மார்கன் 324 சிக்ஸர்கள் அடித்து அந்தப் பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஐந்தாம் இடத்தில் தோனி

ஐந்தாம் இடத்தில் தோனி

அதிக சர்வதேச சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ஷாஹித் அப்ரிடி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். தோனி 359 சிக்ஸர்களுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். மார்கன் அவரை முந்த அதிக வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து தோல்வி

இயான் மார்கன் 106 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 328 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் 142, பால்பிர்னி 113 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni’s sixer record as captain set aside by Eoin Morgan
Story first published: Wednesday, August 5, 2020, 17:20 [IST]
Other articles published on Aug 5, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X