இதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்!

Dhoni saffron T Shirt | தோனி பாஜகவில் சேர போகிறாரா?- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பாஜகவில் சேரப்போவதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது.

உலகக் கோப்பை தொடருக்கு பின்பாக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியின் திட்டம் என்ன என்பதுதான் தற்போது வைரலான செய்தியாக இருக்கிறது. தோனி தொடர்ந்து விளையாடுவாரா, அல்லது தோனி ஓய்வை அறிவிப்பாரா என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் தோனி தரப்பில் இருந்து இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. ஓய்வு குறித்து தோனி இதுவரை எதுவுமே பேசவில்லை.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில்தான் தோனி பாஜகவில் சேர போகிறார் என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தது. தோனி வந்தால் கண்டிப்பாக கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜகவை சேர்ந்த சில உறுப்பினர்களும் பேட்டி அளித்து இருந்தனர். தோனி ஓய்விற்கு பின் பாஜகவில் இணைவார் என்று வரிசையாக நிறைய கணிப்புகளும் வெளியானது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் எப்போதும் போல, மைதானத்தில் அமைதியாக இருப்பது போலவே தோனி இதற்கும் அமைதியாக இருந்தார். அரசியல் திட்டங்கள் குறித்து தோனி எதுவுமே தெரிவிக்கவில்லை. பாஜகவினர் தெரிவித்த கருத்துக்கும் தோனி எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.

புகைப்படம்

இந்த நிலையில்தான் தற்போது தோனியின் புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் வெளியான தோனியின் முதல் புகைப்படம் இதுவாகும். இதில் தோனி காவி நிறத்தில் டீ சர்ட் அணிந்து இருக்கிறார். முதல் முறை அவர் இப்படி காவி நிறத்தில் முழுக்க டீ சர்ட் அணிந்து உள்ளார்.

பலர் கேள்வி

பலர் கேள்வி

இதனால் தோனியின் ரசிகர்கள் பலர், அவர் ஏன் இப்போது இந்த டீ சர்ட்டை போட்டு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இதில் என்ன உள்குத்து உள்ளது. கண்டிப்பாக தோனிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. அதை அவர் மறைமுகமாக டீ சர்ட் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கூறி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni saffron color t-shirt makes new controversy after a world cup defeat.
Story first published: Thursday, July 18, 2019, 10:17 [IST]
Other articles published on Jul 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X