For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு சின்ன ரூம்.. அதில தல தோனி...! வேற எந்த கேப்டனையாவது இந்த கோலத்தில் பார்த்திருப்பீங்களா?

காஷ்மீர்: ராணுவ பயிற்சியில் இருக்கும் தோனி, ஒரு சிறிய அறையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் படு வைரலாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரரான தோனி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் தேதி லே பகுதியில் கொடியேற்றத்துடன் முடிவடைகிறது.

அணியில் தமது செயல்பாடு, ஓய்வு நெருக்கடி ஆகிய விஷயங்களை தள்ளி போடுவதற்காக 2 மாதங்கள் விடுமுறை எடுத்துள்ளார் தோனி. அதே நேரத்தில், காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

இந்நிலையில் தற்போது தோனியின் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது போன்று தெரிகிறது.

ஒரு அறையில் தோனி

அந்த புகைப்படத்தில் தோனி ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் ஒரு சிறிய அறை தெரிகிறது. அதில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய கட்டிலில் தோனி உட்கார்ந்து இருக்கிறார். ராணுவ உடை அணிந்திருக்கிறார்.

ஷூ பாலிஷ்

ஷூ பாலிஷ்

பின்னர், இடதுகையில் ஒரு ஷூவை பிடித்துக் கொண்டு, மறுகையில் பிரஷூடன் காட்சி தருகிறார். படு ஸ்பீடாக அந்த ஷூவுக்கு தோனி பாலிஷ் போடுகிறார். அவரது வேகம் அந்த புகைப்படத்தின் வழியாக நன்றாக தெரிகிறது.

உயர் பதவியில் தோனி

உயர் பதவியில் தோனி

ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக பதவி வகிக்கும் தோனி இவ்வளவு பெரிய உயர் பதவியில் இருக்கிறார். ஆனால், தமது வேலையை தானே செய்து கொள்கிறார்.

உதாரணமான தோனி

உதாரணமான தோனி

தனது ஷூவிற்கு தானே பாலிஷ் செய்து பயிற்சிக்கு தயாராவது இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக தெரிகிறது என்று கூறலாம். ராணுவத்தின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள எண்ணத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பலாம்.

வாலிபால் வீடியோ

தோனியின் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் பகிர்ந்து கொண்டு, மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். முன்னதாக, அவர் ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 11, 2019, 9:29 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
Dhoni shoe polishing photo in military camp, goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X