For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனின்னா பெரிய ஆளா..? ஐபிஎல்லில் அவரு விளையாடவே கூடாது.. தடை விதிங்க..! கொந்தளிக்கும் அந்த வீரர்

டெல்லி: நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனியை, குறைந்தது 3 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, நடப்பு ஐபிஎல் 25வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியை ஐபிஎல் தொடர் இருக்கும் வரை யாரும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு சர்ச்சைக்கு ஆளானது.

அந்த போட்டியில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்து தான் அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம். அந்த பந்தை சான்ட்னர் எதிர்கொண்ட போது, பந்து இடுப்புக்கு மேல் பறந்தது.

ரோஹித், டி காக் ஆட்டம் வீண்.. பட்லரின் அதிரடியில் மும்பை திணறல்.. தட்டுத்தடுமாறி ராஜஸ்தான் வெற்றி!! ரோஹித், டி காக் ஆட்டம் வீண்.. பட்லரின் அதிரடியில் மும்பை திணறல்.. தட்டுத்தடுமாறி ராஜஸ்தான் வெற்றி!!

நோபால் சர்ச்சை

நோபால் சர்ச்சை

அதனை ஸ்ட்ரைட் அம்பயர் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட் நோபால் என்று அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் உல்ஹாஸ் காந்தே அதனை ரத்து செய்தார். இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

தோனி வாக்குவாதம்

தோனி வாக்குவாதம்

நோ பால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து நோபால் ரத்து குறித்து நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பாக தோனிக்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தோனியின் பயணம்

தோனியின் பயணம்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இது குறித்து கூறியதாவது: இந்திய அணிக்கான தோனியின் பயணம் அபரிதமானது. அதை யாரும் மறுக்க முடியவில்லை.

இவ்வளவு கோபம்

இவ்வளவு கோபம்

அந்த சாதனைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவரின் கோபத்தை நான் பார்த்தது கூட இல்லை. சென்னை அணிக்கு கேப்டனாக வந்தபின் சிறிது உணர்ச்சிவசப்பட்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நடந்து கொண்டார்.

தோனி ஏன் வந்தார்?

தோனி ஏன் வந்தார்?

அந்த போட்டியில் ஏன் அவர் மைதானதுக்குள் வந்தார்? தோனி வந்தே இருக்கக் கூடாது. ஆட்டத்தில் கடைசிநேரத்தில் தோனி மைதானத்துக்குள் வந்திருக்கக் கூடாது. எனவே அவருக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும்.

3 போட்டிகள்

3 போட்டிகள்

தோனி போன்றே வருங்காலத்தில் வேறு யாரேனும் செய்தால் என்னாகும்? எல்லா கேப்டனும் இப்படி நடந்து கொண்டால், நடுவருக்கு என்ன மரியாதை? எனவே, தோனிக்கு தடை விதிக்க வேண்டும், குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அவரை விளையாட விடக்கூடாது. அவருக்கு அளிக்கும் தண்டனை மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று சேவாக் கூறினார்.

Story first published: Saturday, April 13, 2019, 23:06 [IST]
Other articles published on Apr 13, 2019
English summary
Dhoni should have been banned for 2 matches over umpiring outburst says former player Virender Sehwag.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X