For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகனே.. நான் உனக்கு கேப்டன்.. தப்பு செய்துவிட்டு பொய் சொன்ன ஷமி.. செம கடுப்பாகி எகிறிய தோனி!

மும்பை : தோனி கேப்டனாக இருந்த போது நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ஒன்றில் வேகப் பந்துவீச்சாளர் ஷமி செய்த தவறை மறைக்க முயன்றார்.

Recommended Video

தப்பு செய்துவிட்டு பொய் சொன்ன ஷமி.. செம கடுப்பான தோனி!

அப்போது கேப்டன் தோனி கடும் கோபம் அடைந்து அவரிடம் கடுமையாக பேசி உள்ளார்.

அந்த சம்பவத்தை இப்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் முகமது ஷமி. "உன் கேப்டனையே முட்டாள் ஆக்க நினைக்காதே" என அப்போது தோனி கோபமாக கூறியதாக தெரிவித்துள்ளார் ஷமி.

சேவாக் மட்டும் வேற நாட்டுக்கு ஆடி இருந்தார்னா.. முன்னாள் பாக். கேப்டன் சர்ச்சை!சேவாக் மட்டும் வேற நாட்டுக்கு ஆடி இருந்தார்னா.. முன்னாள் பாக். கேப்டன் சர்ச்சை!

முகமது ஷமி

முகமது ஷமி

முகமது ஷமி 2013ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அப்போது டெஸ்ட் அணியில் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா இருந்த நிலையில், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக அணியில் இணைந்தார். அவர் 2014 நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.

கேப்டன் கூல் தோனி

கேப்டன் கூல் தோனி

நியூசிலாந்து மண்ணில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஷமி கோபத்தில் ஒரு பவுன்சர் வீசி இருக்கிறார். அது பற்றி கேப்டன் தோனி கேட்ட போது தான் பொய் சொல்லி சமாளித்ததாகவும்,

2௦14 டெஸ்ட் போட்டி

2௦14 டெஸ்ட் போட்டி

2014ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆடியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் ஆடியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்தது,

மெக்குல்லம் அதிரடி

மெக்குல்லம் அதிரடி

அடுத்து ஆடிய இந்தியா 438 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்தலாம் என திட்டமிட்ட இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் பிரெண்டன் மெக்குல்லம். அவர் நீண்ட நேரம் களத்தில் நின்று 559 பந்துகளில் 302 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய வாட்லிங் 124, நீஷம் 137 ரன்கள் குவித்தனர்.

நழுவிய கேட்ச்கள்

நழுவிய கேட்ச்கள்

மெக்குல்லம் 14 ரன்கள் அடித்து இருந்த போது ஷமி பந்துவீச்சில் ஒரு கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை விராட் கோலி நழுவ விட்டு இருந்தார். அதனால், மெக்குல்லம் அடித்து ஆடிய போது சோகத்தில் இருந்த ஷமி. அடுத்து மீண்டும் வேறு ஒரு பேட்ஸ்மேனின் கேட்ச் நழுவ விடப்பட்டது.

கோபத்தில் செய்த காரியம்

கோபத்தில் செய்த காரியம்

அதனால் கோபம் அடைந்த ஷமி, உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரின் கடைசி ஓவரில், விக்கெட் கிடைக்காத கோபத்தில், பெரிய பவுன்சரை வீசினார். அந்த பந்து விக்கெட் கீப்பர் தோனியின் தலையை தாண்டி பறந்து சென்றது.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

அதன் பின் உணவு இடைவேளைக்கு அனைவரும் அறைக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது, தோனி, ஷமியிடம் கேட்ச் நழுவியது எனக்கும் தெரியும். ஆனால், அந்த கடைசி பந்தை சரியாக வீசி இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.

ஷமி அப்போது பந்து கையில் இருந்து நழுவி விட்டது எனக் கூறி சமாளித்துள்ளார். ஆனால், அதை சரியான கணித்த தோனி, அவரிடம் கடுமையாக பேசி உள்ளார். ஹிந்தியில் தோனி என்ன சொன்னார் என்பதை ஷமி பகிர்ந்து கொண்டார்.

பொய் சொல்லாதே

பொய் சொல்லாதே

தோனி சொன்னது இதுதான். "மகனே நான் உனக்கு சீனியர். உனக்கு கேப்டன். என்னிடம் பொய் சொல்லாதே. என்னை முட்டாளாக்க முயற்சி செய்யாதே" என கூறினாராம் தோனி. இந்த சம்பவத்தை தற்போது பேட்டியில் பகிர்ந்து கொண்டார் முகமது ஷமி. அந்த தொடரில் தோனி கேப்டன்சி மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

அந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பெற வேண்டிய இரண்டாவது போட்டியை டிரா செய்தது இந்திய அணி. அதனால் டெஸ்ட் தொடரில் இந்தியா 0 - 1 என தோல்வி அடைந்தது. அப்போது இந்தியா தொடர்ந்து வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்து வந்ததால் தோனி மீது கடும் விமர்சனம் எழுந்தது.

Story first published: Sunday, May 10, 2020, 14:08 [IST]
Other articles published on May 10, 2020
English summary
Captain Dhoni slammed Mohammed Shami for telling a lie in second test match of India - Newzealand test series in 2014.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X