தல தோனி முதல் பிராவோ வரை.. சி.எஸ்.கே.வின் 5 தரமான மேட்ச் வின்னர்கள்.. சமாளிக்குமா கொல்கத்தா!

துபாய்: ஐ.பி.எல் 2021 இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி போற போவது யார்? என்பதை இரு அணிகளின் ரசிகர்கள் இப்போதே விவாதம் நடத்த தொடங்கி விட்டனர்.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

இரு அணிகளிலும் ஆட்டத்தை முடித்து வைக்ககூடிய தரமான வீரர்கள் உள்ளனர். சென்னை அணி வெற்றி பெற வேண்டுமானால் இந்த 5 மேட்ச் வின்னர்கள் கைகொடுத்தால் போதும். அந்த மேட்ச் வின்னர்கள் யார்? என்பது பற்றி இப்போது காண்போம்.

" data-gal-desc="மேட்ச் வின்னர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நம்ம தல தோனிதான். உலகத்திலேயே பெஸ்ட் பினிஷர் தோனிதான். ஆனால் இந்த சீசனில் தோனி 14 போ..." data-gal-src="tamil.mykhel.com/img/600x100/2021/10/dhoni-1634289640.jpg">
கேப்டன் தோனி

கேப்டன் தோனி"-

மேட்ச் வின்னர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நம்ம தல தோனிதான். உலகத்திலேயே பெஸ்ட் பினிஷர் தோனிதான். ஆனால் இந்த சீசனில் தோனி 14 போட்டிகளில் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தோனி பார்ம் போய்விட்டது; இனி அவ்வளவுதான் என்று பேசினார்கள். ஆனால் டெல்லிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து மேட்சை முடித்து கொடுத்து பைனலுக்கு அணியை அழைத்து சென்றார் தோனி. இதனால் கடைசி போட்டியிலும் தோனி மேட்ச் வின்னராக ஜொலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ருதுராஜ் கெய்க்வாட்:-

ருதுராஜ் கெய்க்வாட்:-

சென்னை அணியின் கம்பீரமான தொடக்க ஆட்டக்காரர். 15 போட்டிகளில் 603 ரன்கள் எடுத்து இந்த சீசனில் ஆரஞ்சு கேப் வெல்லும் முனைப்பில் உள்ளார். கெய்க்வாட் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். நடப்பு தொடரில் பல போட்டிகளில் மேட்ச் வின்னராக சாதித்து காட்டியுள்ளார். இறுதி போட்டியிலும் சென்னை ரசிகர்கள் இவரை மலைபோல் நம்பியுள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா:-

ரவீந்திர ஜடேஜா:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஜடேஜா. இந்த சீசனில் 11 விக்கெட்டுகள் மற்றும் 227 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியில் அவர் செமையாக அணியை வெற்றி பெற வைத்ததை யாரும் மறக்க முடியாது.

 ஷர்துல் தாக்கூர்:-

ஷர்துல் தாக்கூர்:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன். 15 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் உள்ளார். மிக சிறப்பாக பேட் செய்யக்கூடியவர் என்பதால் சி.எஸ்.கே.வின் துருப்பு சீட்டாக திகழ்கிறார்.

டுவைன் பிராவோ:-

டுவைன் பிராவோ:-

பல காலமாக சி.எஸ்.கே.வின் கதாநாயகனாக திகழ்பவர். 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளுடன் சி.எஸ்.கே அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீர்ர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி நன்றாக பேட்டிங் செய்து 261 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Both Chennai and Kolkata have quality players who can finish the game. At the top of the list of match winners is our head Dhoni. Dhoni is the best finisher in the world
Story first published: Friday, October 15, 2021, 14:53 [IST]
Other articles published on Oct 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X