For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காஷ்மீரில் தோனி இருக்கும் இடத்தில் ரிஸ்க்.. வெளியான பகீர் தகவல்!

Recommended Video

Dhoni in kashmir | காஷ்மீரில் தோனி இருக்கும் இடம் குறித்து வெளியான பகீர் தகவல்!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் தோனி இருக்கும் பகுதி ஆபத்தானது என்ற பகீர் தகவல் கிடைத்துள்ளது.

தோனி இராணுவத்தில் சுமார் இரண்டு வார காலம் பணியாற்ற உள்ளார். அதற்காக காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட தரைப்படையுடன் இன்று இணைந்தார். அவர்களுடன் சராசரி இராணுவ வீரராக பணியாற்ற இருக்கிறார்.

அவர் இருக்கும் பகுதி குறித்த தகவல்கள் இதுவரை அதிகம் தெரியாத நிலையில், தோனியின் முதல் நாளில் அவர் பணியாற்றும் இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி! இது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!

தெற்கு காஷ்மீர்

தெற்கு காஷ்மீர்

தோனி தற்போது தெற்கு காஷ்மீரில் விக்டர் ஃபோர்ஸ் எனப்படும் இராணுவப் பகுதியில் இருக்கும் தரைப்படையுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். பாராஷூட் பிரிவில் லெப்டினன்ட் கலோனல் ஆக இருந்தாலும், தோனி சாதாரண வீரர் போல ரோந்துப் பணிகள், பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதி

பாதிக்கப்பட்ட பகுதி

தெற்கு காஷ்மீரில் தோனி இருக்கும் பகுதி தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான பகுதி என கூறப்படுகிறது. அது ஆபத்தான பகுதி என்பதால் அங்கே எப்போதும் இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. அங்கே தான் தோனி இரண்டு வார காலம் பணியாற்ற இருக்கிறார். தோனி அங்கே இருக்கும் வரை எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்ற பரபரப்பு நிலவுகிறது.

இது தேவையா?

இது தேவையா?

தோனி இராணுவத்தில் பணியாற்றுவது அவரது ரசிகர்களுக்கு நாட்டுப்பற்று மிக்க செயலாக தெரிந்தாலும், அதன் பின்னே பெரிய ஆபத்தும் உள்ளது என்பது சில ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கலாம். தோனி இப்படி ஒரு ஆபத்தான முடிவை எடுத்தாலும், எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளார்.

வீரர்கள் கொண்டாட்டம்

தோனியின் முதல் நாளன்று இந்திய இராணுவ வீரர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டுக்காக எல்லையில் உழைத்து வரும் வீரர்கள், தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு களித்த தோனியை தங்கள் அருகில் கண்டு மகிழ்ந்தனர். சிலர் பேட்டில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர்.

கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் வாழ்க்கை

வரும் ஆகஸ்ட் 15 வரை இந்திய இராணுவத்துடன் தங்கி இருக்கப் போகும் தோனி, அடுத்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பாரா? என தெரியவில்லை. தோனி 2020 டி20 தொடரில் ஆட உள்ளார் என்று சிலர் கூறினாலும், அதற்கான சாத்தியம் குறைவு தான்.

Story first published: Friday, August 2, 2019, 9:24 [IST]
Other articles published on Aug 2, 2019
English summary
Dhoni to serve in army in militancy infested South Kahsmir area
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X