For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரை விட தோனி தான் உயர்ந்த கேப்டன்.. எப்படி தெரியுமா? பாக். வீரர் அப்ரிடி சொன்ன காரணம்

கராச்சி : முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தோனி, ரிக்கி பாண்டிங் இடையே யார் சிறந்த கேப்டன் என்பது பற்றி சமூக வலைதளத்தில் கூறி உள்ளார்.

அதிக கோப்பைகள் வென்ற கேப்டன்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி.

அவர்கள் இருவர் இடையே யார் சிறந்த கேப்டன் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

செம சிக்கலில் சிஎஸ்கே.. 3 முக்கிய வீரர்கள் ஆட வாய்ப்பில்லை.. தோனி தான் டீமை காப்பாத்தணும்!செம சிக்கலில் சிஎஸ்கே.. 3 முக்கிய வீரர்கள் ஆட வாய்ப்பில்லை.. தோனி தான் டீமை காப்பாத்தணும்!

தோனியின் வெற்றிகள்

தோனியின் வெற்றிகள்

தோனி மூன்று வித ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை வென்று அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

பாண்டிங் சாதனை

பாண்டிங் சாதனை

மறுபுறம் ரிக்கி பாண்டிங் 2003 மற்றும் 2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 2006 மற்றும் 2009 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிகளையும் வென்று கொடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பையை மட்டுமே அவர் வெல்லவில்லை.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

இவர்கள் இருவர் இடையே ஆன ஒப்பீடு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இருவரில் தோனி தான் சிறந்த கேப்டன் என இந்திய ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இதே கேள்விக்கு பதில் அளித்தார் ஷாஹித் அப்ரிடி.

அப்ரிடி பதில்

அப்ரிடி பதில்

சமீபத்தில் ட்விட்டரில் முன்னாள் ஷாஹித் அப்ரிடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர் யார் சிறந்த கேப்டன் - தோனியா? பாண்டிங்கா? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தோனி தான் என பதில் கூறினார் அப்ரிடி.

ஏன் தோனி?

ஏன் தோனி?

பாண்டிங்கை விட தோனியை அதிகமாக தான் மதிப்பிடுவதாகவும், ஏனெனில் அவர் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை வளர்த்தார் என விளக்கம் கூறி இருந்தார் அப்ரிடி. இது ஆச்சரியமான விளக்கமாகவும் அமைந்தது. கடந்த சில நாட்களில் இதே விஷயத்தை முன்னாள் இந்திய வீரர் கம்பீர் மாற்றிக் கூறி இருந்தார்.

கம்பீர் என்ன சொன்னார்?

கம்பீர் என்ன சொன்னார்?

கம்பீர் சில நாட்கள் முன்பு, கங்குலி உருவாக்கிய அணியை வைத்து தான் தோனி வெற்றிகளை குவித்தார் என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். ரசிகர்கள் பலரும் கூட அதற்கு எதிர்ப்பு கூறி இருந்தனர். தற்போது அப்ரிடி தோனி புதிய அணியை வளர்த்தார் என கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, July 30, 2020, 21:45 [IST]
Other articles published on Jul 30, 2020
English summary
Dhoni vs Ricky Ponting - Shahid Afridi picks his choice between two legendary captains. He rates Dhoni better than Ricky Ponting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X