For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி ஒரு ஜீனியஸ்…! அவர் தான் இந்தியாவின் டிரம்ப் கார்டு..! சொல்லுங்க இதுக்கு மேல வேற என்ன வேணும்

Recommended Video

Dhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி!.. புகழ்ந்து தள்ளிய சஹால்- வீடியோ

மும்பை:உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கூறி இருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. புள்ளிப் பட்டியல் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாகவும் மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி ஆட்டங்களில் வெற்றி பெற்றும் தேர்வு செய்யப்பட்டது.

10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் சந்திக்கின்றன. உலக கோப்பைக்கான இந்திய அணி, வரும் 22ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. வீரர்களின் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

ஊக்கமருந்து சர்ச்சை.. கோமதி மாரிமுத்து விளக்கம்! இந்திய தடகள சம்மேளனம் பதில் அளிக்குமா? ஊக்கமருந்து சர்ச்சை.. கோமதி மாரிமுத்து விளக்கம்! இந்திய தடகள சம்மேளனம் பதில் அளிக்குமா?

தோனியின் பங்களிப்பு

தோனியின் பங்களிப்பு

கோப்பை இந்தியாவுக்கு தான் பலரும் ஆதரவு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதிலும் தோனியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். கோலி தலைமையிலான படையும் உலக கோப்பைக்கு தயாராகி விட்டது.

தோனி தான் துருப்புச்சீட்டு

தோனி தான் துருப்புச்சீட்டு

இந் நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில் தோனி என்ற ஜீனியஸ் இருக்கிறார்.

இந்திய அணியின் மூளை

இந்திய அணியின் மூளை

இந்திய அணியின் மூளை அவர். ஏற்கெனவே 2 உலக கோப்பைகளில் வென்ற அணியை வழிநடத்தியவர் என்பதால் இந்த ஆட்டத்தை பற்றி நன்றாக அறிந்தவர். அவருடைய அனுபவம் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் நிச்சயம் உதவும். தோனியே உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார்.

சிறப்பான பேட்டிங் வரிசை

சிறப்பான பேட்டிங் வரிசை

அதே சமயத்தில் கோலி தலைமையிலான அணிக்கு இது முதல் உலக கோப்பை தொடர். எனவே, அவரும் தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க நிச்சயம் முயற்சிப்பார். சிறப்பான பேட்டிங் வரிசை கொண்ட இந்தியாவிற்கு இங்கிலாந்தின் ஆடுகளமும் சாதகமாகவே அமையும். உலக கோப்பை தொடரில் 450 ரன்கள் வரை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறினார்.

Story first published: Tuesday, May 21, 2019, 20:26 [IST]
Other articles published on May 21, 2019
English summary
Dhoni is a genius and he will be trump card for india says former Pakistan player zaheer abbas.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X