For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரே ஒரு போர்ஸ்.. அவருக்கு எதுக்கு போர்ஸ்..! நம்ம ஜனங்களை அவர் தான் பாதுகாப்பார்

மும்பை: தோனியை பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை, குடிமக்களையும் பாதுகாப்பு படை வீரர்களையும் அவர் பாதுகாப்பார் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வருகிறார். ராணுவத்தினருடன் சேர்ந்து, அவ்வப்போது கலந்துரையாடுவதுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

உலக கோப்பை தொடரில் விளையாடிய தோனி, அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெற உள்ளதாக அறிவித்திருந்தார். பாராசூட் ரெஜிமெண்டில் தங்கி பயிற்சி பெற அனுமதி கோரியிருந்தார்.

தரைப்படையில் தோனி

தரைப்படையில் தோனி

அதனை பரிசீலித்த இந்திய ராணுவம், தோனியை 106வது தரைப்படை பிரிவில் இணைத்து கொள்வதாக அறிவித்தது. எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார் என்று கூறப் பட்டது. பின்னர் ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட்டுடன், தோனி இணைந்தார்.

ரோந்து பணி

ரோந்து பணி

அங்கு அவர் 2 மாத பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபடுகிறார். மேலும் வீரர்களுடன் இணைந்து தங்க உள்ளார்.

சிறப்பாக செயல்படுகிறார்

சிறப்பாக செயல்படுகிறார்

இந்நிலையில் தோனி ராணுவத்தில் இணைந்தது பற்றி ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது : நாங்கள் தோனியை பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. அவர் தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்படுகிறார். குடி மக்களையும், பாதுகாப்பு படை வீரர்களையும் அவர் பாதுகாப்பார்.

பயிற்சிகள்

பயிற்சிகள்

ஒவ்வொரு இந்திய குடிமகனும், ராணுவ சீருடை அணிய விரும்பினால் அவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பின் பணிகளில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் தோனி தன்னுடைய அடிப்படை பயிற்சிகளை தற்போது பெற்று வருகிறார்.

நாட்டுக்கு சேவை

நாட்டுக்கு சேவை

தமது பணிகளை தொடர்ந்து அவர் செய்வதன் மூலம் நிச்சயம் நாட்டுக்காக சேவை செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்றார். முன்னதாக, 2015ம் ஆண்டில், ஆக்ரா பயிற்சி முகாமில், ராணுவத்தில் 5 ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னர் தோனி ஒரு தகுதிவாய்ந்தவர் ஆனார்.

Story first published: Saturday, July 27, 2019, 11:30 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
Dhoni will protect citizens says army chief bipin rawat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X