சான்ஸ் கிடைக்குமா? காத்திருக்கும் தோனி.. காரணம் இவர்கள் தான்.. புட்டு புட்டு வைத்த முன்னாள் வீரர்!

மும்பை : தோனி அடுத்து என்ன செய்யப் போகிறார்? எப்போது இந்திய அணிக்கு திரும்பப் போகிறார்? என்பது குறித்து சில நாட்களாக செய்திகள் இறக்கை கட்டி பறக்கிறது.

இந்த நிலையில், முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தோனி வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார் எனக் கூறி அதிர வைத்துள்ளார்

இன்னும் பயம் போகலை.. 2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் தப்பிய அம்பயரின் அதிர்ச்சி கதை!

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அதுவும் இரண்டு இளம் வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது? என்பதை அவர் உற்று நோக்கி வருகிறார். அவர்கள் சரியாக ஆடாத பட்சத்தில் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என ஐபிஎல்-லுக்கு பின் அவர் முயற்சி செய்வார் எனவும் கூறி உள்ளார்.

இந்திய அணியில் தோனி இல்லை

இந்திய அணியில் தோனி இல்லை

இந்திய அணியில் 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி சேர்க்கப்படவில்லை. தோனி அவராகவே அணியில் இருந்து விலகி இருப்பதாக கூறப்பட்டாலும், அணியில் அவரை தேர்வு செய்யவில்லை என்பதே உண்மை என நம்பப்படுகிறது.

ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை

ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை

இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிறப்பாக ஆடாத நிலையிலும் அவரை முன்னிலைப்படுத்தி வருகிறது தேர்வுக் குழு.

அடுத்து சஞ்சு சாம்சன்

அடுத்து சஞ்சு சாம்சன்

ஒருவேளை ரிஷப் பண்ட் இன்னும் சில போட்டிகளுக்கு பின்னரும் சரியாக ஆடாவிட்டால், அவரை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இப்போதே மாற்று வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார்.

தேர்வுக் குழு திட்டவட்டம்

தேர்வுக் குழு திட்டவட்டம்

தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், தோனியை தாண்டி இந்திய அணி வந்துவிட்டதாகவும், இனி ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறி இருந்தார்.

தோனி முடிவு என்ன?

தோனி முடிவு என்ன?

அதே சமயம், தோனி சில நாட்கள் முன்பு வலைப் பயிற்சியை தொடங்கினார். அவர் இதுவரை ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. அடுத்ததாக 2௦20 ஐபிஎல் மட்டுமின்றி, 2021 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தோனியின் எதிர்காலம்

தோனியின் எதிர்காலம்

இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், தோனியின் நிலை என்ன? அவரது அடுத்த நகர்வு என்ன? என்பது பற்றி விவிஎஸ் லக்ஷ்மன் பேசி இருக்கிறார்.

பண்ட், சாம்சன் செயல்பாடு

பண்ட், சாம்சன் செயல்பாடு

பண்ட் மற்றும் சாம்சன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை தோனி காத்திருந்து பார்ப்பார். சரியான நேரம் வரும் போது தனக்கான வாய்ப்பை பெறுவார். அதுவும் ஐபிஎல் தொடருக்கு பின்னர் தான் எனக் கூறி இருக்கிறார் லக்ஷ்மன்.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

சிஎஸ்கே அணியை வழிநடத்தும் போதும், அந்த அணிக்காக ஆடும் போதும் தோனி சிறப்பாக ஆடுவார் என்பது நிச்சயம் என்பதால் 2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக செயல்படுவார் எனவும் கூறி இருக்கிறார் லக்ஷ்மன். அந்த செயல்பாட்டின் மூலம் தான் தோனி அணிக்கு வருவார் என்பது இவரின் பார்வையாக உள்ளது.

தோனி ரசிகர்கள் அதிர்ச்சி

தோனி ரசிகர்கள் அதிர்ச்சி

இரண்டு இளம் வீரர்களால் தோனி வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருப்பதாக அவர் கூறி இருப்பது தோனி ரசிகர்களை அதிர வைக்கும் தகவலாக உள்ளது. அந்த அளவிற்கு தோனியை அணியில் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni will wait for the performance of Pant and Samson says VVS Lakshman. IPL 2020 will also be a major factor for Dhoni.
Story first published: Friday, November 29, 2019, 18:14 [IST]
Other articles published on Nov 29, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X