For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் ஐ.பி.எல் கனவுக்கு பி.சி.சி.ஐ யால் ஆபத்து..!சென்னை ரசிகர்கள் இம்முறை தோனியை பார்க்க முடியாது

மும்பை: ஐ.பி.எல். 15வது சீசன் வரும் மார்ச் இறுதியில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

Recommended Video

Dhoniயின் Chennai IPL கனவு! CSK Fans ஏமாற்றம் | OneIndia Tamil

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் போட்டியை எங்கு நடத்தலாம் என்று பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருகிறது.

தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் யு.ஏ.இ. போன்ற நாடுகள் ஐ.பி.எல். போட்டியை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வந்தார் தல தோனி..!! ஐ.பி.எல். ஏலத்திற்காக பலே திட்டம்..! CSK நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை..!சென்னை வந்தார் தல தோனி..!! ஐ.பி.எல். ஏலத்திற்காக பலே திட்டம்..! CSK நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை..!

பி.சி.சி.ஐ. ஆலோசனை

பி.சி.சி.ஐ. ஆலோசனை

ஆனால், பி.சி.சி.ஐ.யோ , ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தையும் மும்பையில் உள்ள 3 கிரிக்கெட் மைதானங்களில் நடத்த முடிவு எடுத்துள்ளத. இதன் மூலம்

வீரர்கள் விமான நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பிளான் பியாக ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருகிறது

தோனியின் ஆசை

தோனியின் ஆசை

இந்த நிலையில், சென்னையில் தான் எனது கடைசி ஐ.பி.எல். போட்டியை விளையாடுவேன் என்று தோனி பலமுறை கூறியுள்ளார். தோனிக்கும் தற்போது வயதாகிவிட்டது. கடந்த ஐ.பி.எல். சீசனில் அவரது பேட்டிங் பழைய மாதிரி இல்லை. இதனால் இந்த ஆண்டே தோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும்.

ஓய்வு பெற மாட்டார்

ஓய்வு பெற மாட்டார்

தற்போது பி.சி.சி.ஐ. போட்டிகளை மும்பையில் நடத்தினால் தோனியின் ஆசை நிறைவேறாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை ரசிகர்களும் தோனியை பார்க்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தோனி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஒரு சிலர், தோனி சென்னையில் தான் தனது கடைசி போட்டி, அது அடுத்த ஆண்டோ, இல்லை அடுத்த 5 ஆண்டோ என்று கூறினார்.

சேப்பாக்கம் மைதானம்

சேப்பாக்கம் மைதானம்

இதனால் சென்னையில் போட்டி நடைபெறும் போது தான் தோனி ஓய்வு பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்காக சேப்பாக்கம் மைதானம் புதிய கேலரிகள் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. ஒரு வேலை கேலரிகள் கட்டி முடிக்க முடியவில்லை என்றால், குறைவான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

Story first published: Friday, January 28, 2022, 20:59 [IST]
Other articles published on Jan 28, 2022
English summary
Dhoni Wish to Play IPL in Chennai will affect by BCCI decision தோனியின் ஐ.பி.எல் கனவுக்கு பி.சி.சி.ஐ யால் ஆபத்து..!சென்னை ரசிகர்கள் இம்முறை தோனியை பார்க்க முடியாது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X