For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா வைரஸ் போற வரைக்கும் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. தோனி திட்டவட்ட முடிவு.. குவியும் வரவேற்பு!

ராஞ்சி : கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கி, உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தோனி எந்த விளம்பர படங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் ஈடுபடப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளார்.

Recommended Video

IPL | Dhoni will become Chennai Super Kings boss in next 10 years says CSK CEO

அது மட்டுமின்றி அதிரடியாக விவசாயத்தில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளார். தான் மட்டும் விவசாயம் செய்வதை தாண்டி மற்றொரு முக்கிய விஷயத்தையும் செய்ய உள்ளார்.

ஆம், இயற்கை விவசாயத்தை வளர்க்கும் வகையில் புதிய தயாரிப்பு ஒன்றையும் சந்தைப்படுத்த உள்ளார்.

இயான் போதம், இம்ரான்கான், ரிச்சர்ட் ஹாட்லி மூணு பேரைவிட நான் சிறந்தவன்... கபில் தேவ்இயான் போதம், இம்ரான்கான், ரிச்சர்ட் ஹாட்லி மூணு பேரைவிட நான் சிறந்தவன்... கபில் தேவ்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக இருந்தார். கடந்த ஓராண்டாக எந்த கிரிக்கெட் போட்டியில் ஆடாத அவர் ஐபிஎல் தொடரில் ஆடுவதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்பக் கூடும் என சிலர் கூறி வந்தனர்.

பண்ணை வீட்டில் தோனி

பண்ணை வீட்டில் தோனி

எனினும், கொரோனா வைரஸ் காரணமாக தோனியால் கிரிக்கெட் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டிலேயே தங்கி உள்ளார்.

ட்ராக்டர்

ட்ராக்டர்

அங்கே அவருக்கு பல ஏக்கர் அளவில் விவசாய நிலம் உள்ளது. அதில் புதிய ட்ராக்டர் வாங்கி விவசாயம் செய்யத் துவங்கினார் தோனி. துவக்கத்தில் வாகனங்கள் மீதான ஆர்வம் காரணமாக தோனி ட்ராக்டர் ஓட்டுவதாக கருதப்பட்டது.

தகவல்

தகவல்

ஆனால், தோனி இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், தான் மட்டும் செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், இயற்கை உரங்கள் தயாரிப்பிலும் இறங்க உள்ளார் தோனி. இந்த தகவலை தோனியின் நண்பரும், அவருடைய நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருப்பவருமான மிஹிர் திவாகர் கூறி உள்ளார்.

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

திவாகர் கூறுகையில், "தோனியின் ரத்தத்திலேயே நாட்டுப்பற்று ஊறி உள்ளது. நாட்டுக்காக சேவை செய்வதாக இருக்கட்டும், விவசாயமாக இருக்கட்டும், அதில் அவர் தீவிரமாக இருக்கிறார். அவரிடம் 40 - 50 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இயற்கை விவசாயம் செய்து பப்பாளி, வாழை உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்" என்றார்.

விளம்பரம் இல்லை

விளம்பரம் இல்லை

"பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்வதை தோனி நிறுத்தி விட்டார். வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர் எந்த வித வருவாய் ஈட்டும் செயல்களிலும் ஈடுபடப் போவதில்ல எனக் கூறி உள்ளார்" என்றார் திவாகர். மேலும், நியோ குளோபல் என்ற பெயரில் விரைவில் இயற்கை உரங்களை தயாரித்து அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

தோனி இது பற்றி சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அப்போது நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இயற்கை உரம் ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அதை இன்னும் 2 - 3 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

தோனியின் நாட்டுப்பற்று அனைவரும் அறிந்ததே. இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனாலாக இருக்கிறார். அதையும் தாண்டி எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு தோனி இயற்கை விவசாயத்தின் பக்கம் சாய்ந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 8, 2020, 21:27 [IST]
Other articles published on Jul 8, 2020
English summary
Dhoni won’t involve in commercial activities amid Coronavirus says his friend Mihir Diwakar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X