For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இனி விக்கெட் கீப்பர் கிடையாது.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ.. முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை

Recommended Video

Dhoni End Game : முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ- வீடியோ

மும்பை: தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை இனி அவர் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும், அணிக்கு இனிமேல் ரிஷப் பன்ட் தான் விக்கெட் கீப்பர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதற்கான இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கேப்டன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாக மீண்டும் கோலியே அணியை வழி நடத்தி செல்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி 2 மாத ஓய்வினை ராணுவத்தின் பாராசூட் ரெஜிமன்ட் பிரிவில் பயிற்சி பெற முடிவு செய்திருந்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தொடரில் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

தோனியை கூப்பிட்டே கேளுங்களேன்..! உங்களால முடியுமா? பிசிசிஐக்கு செக் வைத்த கேசவ் பானர்ஜி தோனியை கூப்பிட்டே கேளுங்களேன்..! உங்களால முடியுமா? பிசிசிஐக்கு செக் வைத்த கேசவ் பானர்ஜி

பல்வேறு விஷயங்கள்

பல்வேறு விஷயங்கள்

இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்வுக் குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். உலக கோப்பை தோல்வி, கோலியின் செயல்பாடு, 4வது இடம், தோனியின் ஓய்வு என பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

தோனி ஜாம்பவான்

தோனி ஜாம்பவான்

அவர் கூறியதாவது : தோனி ஓய்வு குறித்து இனியும் பேச எதுவும் இல்லை. இந்திய அணிக்காக 2 உலக கோப்பையை பெற்று கொடுத்தவர். அவர் ஒரு ஜாம்பவான் இது போன்ற மிகச் சிறந்த வீரருக்கு எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று அவர்களுக்கே தெரியும்.

இளம் வீரர் ரிஷப் பண்ட்

இளம் வீரர் ரிஷப் பண்ட்

அவரின் ஓய்வு அவர் கையில்தான் உள்ளது எங்களிடம் எந்த முடிவும் கிடையாது. அதில் பிசிசிஐ தலையிடாது. அதேசமயம் இந்திய அணியின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு இளம் வீரரான ரிஷப் பண்ட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இனி தோனிக்கு முக்கியத்துவம் இல்லை.

விக்கெட் கீப்பர் பொறுப்பு

விக்கெட் கீப்பர் பொறுப்பு

எனவே தோனிக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு விக்கெட் கீப்பர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. டெஸ்ட் அணியில், சாஹா கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று தமிழ்நாடு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார் என்றார்.

Story first published: Monday, July 22, 2019, 13:14 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
Dhoni wont wicket keeping for india hereafter says chief selector MSK Prasad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X