For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி 2.1 இன்ச்..! விக்ரம் லேண்டர் 2.1 கிமீ..! இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்..! வைரல்

டெல்லி: உலக கோப்பையில் தோனியின் ரன் அவுட்டையும், சந்திராயன் -2 கடைசி நேரத்தில் தோல்வியையும் ஒப்பிட்டு இரண்டுமே கெத்து தான் என்ற போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான் 1 திட்டத்தை தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. ஜூலை 22ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண் கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 அமைப்புகளை கொண்டது.

கடந்த 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 நுழைந்தது. 2ம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர், அதிகாலையில் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்குவது தான் திட்டம்.

PKL 2019 : கடைசி நிமிடம்.. வாழ்வா? சாவா? போராட்டம்.. வீரரை காவு கொடுத்து வென்ற பெங்களூரு!PKL 2019 : கடைசி நிமிடம்.. வாழ்வா? சாவா? போராட்டம்.. வீரரை காவு கொடுத்து வென்ற பெங்களூரு!

தகவல் தொடர்பு துண்டிப்பு

தகவல் தொடர்பு துண்டிப்பு

இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க ஆயத்தமானது. ஆனால், நிலவின் மேல்பரப்பில் இருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவு வரை வந்த விக்ரம் லேண்டரின், தகவல் தொடர்பு துண்டானது. இந்த தருணம் விஞ்ஞானிகளை மட்டுமல்ல நாட்டையே சோகமாக்கியது. இஸ்ரோவை பாராட்டிய மக்கள், இந்த முயற்சி கைகூடும் என்று நம்பிக்கை வார்த்தைகளை வெளியிட்டு வருவதோடு ஆறுதல்களையும் கூறி வருகின்றனர்.

2 போட்டோக்கள்

2 போட்டோக்கள்

இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன் அவுட்டையும், விக்ரன் லேண்டரையும் ஒப்பிட்டு இணையத்தில் போட்டோக்கள் வெளியாகி சக்கை போடு போடுகின்றன. அதாவது அரையிறுதியில் வெற்றிக்காக தோனி கடுமையாக போராடினார்.

தோனி ரன் அவுட்

தோனி ரன் அவுட்

இருப்பினும், ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவர் ரன் அவுட்டாக்கும் அந்த புகைப்படத்தை ஒவ்வொரு இந்திய ரசிகரும் மறக்க முடியாத ஒன்று. அரையிறுதியில் தோனியை இழந்த போது ஒட்டுமொத்த இந்தியாவும் சோகமானது. அதேபோன்று தான் இப்போது சந்திராயன் 2 தோல்வியால் நாடே சோகமாக இருக்கிறது போன்ற போட்டோக்களை இணையவாசிகள் வெளியிட்டு உள்ளனர்.

2.1 கிலோ மீட்டர்

2.1 கிலோ மீட்டர்

அந்த போட்டோ இணையத்தில் சரமாரியாக பரிமாறப்பட்டு வருகிறது. தோனி கோட்டை தொடும் போது இருந்த தூரத்தை ஒரு புறமும், விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போட்டோவை வைத்து மனதை தேற்றிக் கொள்கின்றனர் ரசிகர்கள்.

நொறுங்கிய இதயங்கள்

இது தான் இன்றைய இந்தியாவின் ஹார்ட் பிரேக்கிங் புகைப்படங்கள் என்று இந்திய மக்கள் ஒரு குரலில் கருத்துகளை கூறியிருக்கின்றனர். பாரூண் குமார் என்பவர், நாட்டு மக்களின் இதயங்களை ஒரு கணம் ஆடிப்போக வைத்த புகைப்படம் என்று கூறியிருக்கிறார்.

வெற்றியின் விளிம்பில்

இரண்டு லெஜன்டுகள், 20 சென்டிமீட்டர், 200 மீட்டர்கள் என்று ரசிகர் ஒருவர் போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மற்றொரு இரண்டுமே வெற்றிக்கு அருகில் சென்று தோற்றுவிட்டது என்று கூறியிருக்கிறார்.

பெருமையடைகிறோம்

அர்விந்த் பார்மர் என்பவர், 2019ம் ஆண்டின் மனதை என்னவோ செய்த புகைப் படங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் இது ஒரு சிறந்த முயற்சி, குழுவினால் பெருமையடைகிறோம் என்று கூறியிருக்கிறார்.

துண்டிப்பால் தோல்வி

பங்கஜ் குமார் என்பவர், 2019ம் ஆண்டில் இதயத்தை நொறுங்க செய்த புகைப் படங்கள். விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பால் தோல்வி, தோனியில் ரன் அவுட் இந்தியா உலக கோப்பையில் தோல்வி என்று குறிப்பிட்டு உள்ளார்.

மனது உடைந்தது

நித்தி ஆனந்த் என்பவர், இந்தாண்டின் மனதை உடைய வைத்தது இந்த 2 சம்பவங்கள் என்று வருந்தியிருக்கிறார். இப்படி சமூகத்துடனும், இந்தியரின் சராசரி வாழ்க்கையிலும் பின்னி பிணைந்துள்ள கிரிக்கெட்டை வைத்து தங்களின் ஆர்வத்தையும், மன வேதனைனையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Saturday, September 7, 2019, 17:28 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Dhoni world cup runout and chandrayaan 2 failure, fans releases viral photos.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X