For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மட்டும் அதைச் செய்யாமல் இருந்திருந்தா.. வேற லெவல்.. கம்பீர் ஆதங்கம்

டெல்லி: கேப்டன் பதவிக்காக பேட்டிங் ஆர்டரில் தனது இடத்தை மாற்றிக் கொண்டார் தோனி. அதுதான் அவர் செய்த தவறு. அதை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் பல பேட்டிங் சாதனைகளை அவர் முறியடித்திருப்பார். புதிய சாதனைகளைப் படைத்திருப்பார் என்று கூறியுள்ளார் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர்.

Recommended Video

Gary Kirsten எப்படி 7 நிமிடத்தில் இந்திய அணியின் coach ஆனார் தெரியுமா

இந்திய அணியின் அருமையான ஓபனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கம்பீர். இவரும் ஷேவாக்கும் இணைந்து பல அருமையான தொடக்கங்களை கொடுத்துள்ளனர். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் கம்பீர்.

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் தோனி குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் கெளதம் கம்பீர். கம்பீருக்கும், தோனிக்கும் இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும் கூட தோனியின் பேட்டிங் குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார் கம்பீர்.

இந்தியா சாம்பியன்னு சொல்லிக்க முடியாது... பெரிய போட்டிகள்ல முதல்ல ஜெயிக்கணும்.. கவுதம் கம்பீர் இந்தியா சாம்பியன்னு சொல்லிக்க முடியாது... பெரிய போட்டிகள்ல முதல்ல ஜெயிக்கணும்.. கவுதம் கம்பீர்

விசாகப்பட்டிணம் போட்டி

விசாகப்பட்டிணம் போட்டி

2006ம் ஆண்டு விசாகப்பட்டணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது 147 ரன்களைக் குவித்து தனது வருகையை அறிவித்தார் தோனி. அன்று முதல் அவரது அதிரடி சாகசங்கள் தொடர் கதையாகின. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த தோனி, 3வது நிலை வீரராக அப்போதைய கேப்டனாக இருந்த கங்குலியால் பயன்படுத்தப்பட்டார்.

அசகாய தோனி

அசகாய தோனி

3வது நிலை வீரராக தோனி அசகாயம் புரிந்தார். ஒவ்வொரு முறை பேட்டிங் செய்தபோதும் பந்துகளை சிதற விட்டார். வரலாறு படைத்தார். இந்தியாவுக்குக் கிடைத்த கில்கிறிஸ்ட் என்று தோனிக்கு சர்வதேச மீடியாக்கள் புகழாரம் சூட்டின. நடுக்களத்தில் நம்பகமான ஒரு வீரராக அவர் உருவெடுத்தார். அதேசமயம், மேட்ச்சை சிறப்பாக முடிக்கக் கூடியவர் என்ற பெயரையும் தோனி பெற்றார்.

அருமையான ஆட்டம்

அருமையான ஆட்டம்

இலங்கைக்கு எதிராக சேசிங்கில் அவர் எடுத்த 183 ரன்கள்தான் அவரது பெஸ்ட் ஸ்கோர். 2007ம் ஆண்டு தோனி கேப்டன் பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்ததும் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றினார். 3வது நிலையிலிருந்து 5வது நிலைக்கும் பின்னர் 7வது நிலைக்கும் தன்னை மாற்றிக் கொண்டார். அணியின் போட்டிகளை முடிக்கும் பினிஷராக தன்னை மாற்றிக் கொண்டார். இது நல்ல பலனையும் கொடுத்தது என்பதால் ரசிகர்களும் வரவேற்றனர்.

3வது நிலையில் ஆடியிருக்கலாம்

3வது நிலையில் ஆடியிருக்கலாம்

5 மற்றும் 7வது நிலை வீரராக இறங்கினாலும் கூட தோனி விருந்து படைக்கத் தவறியதில்லை. அந்த நிலையில் இருந்தபடி 350 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். 10,773 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 50 பிளஸ் ஆகும். இங்குதான் கம்பீர் ஒரு கருத்தை முன்வைக்கிறார். தோனியின் கடைநிலை வரிசை பேட்டிங்கில் குறை சொல்ல முடியாவிட்டாலும் கூட 3வது நிலையில் அவர் தொடர்ந்து விளையாடியிருந்தால் பல பேட்டிங் சாதனைகளை முறியடித்திருப்பார் என்று சொல்கிறார் கம்பீர்.

புது வரலாறு கிடைத்திருக்கும்

புது வரலாறு கிடைத்திருக்கும்

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், தோனி 3வது நிலையில் அதிகம் விளையாடவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் ஆடியிருந்தால் நிச்சயம் பல சாதனைகள் படைத்திருப்பார். பல சாதனைகளை முறியடித்திருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அதை அவர் செய்திருக்கலாம். செய்திருந்தால் முற்றிலும் வேறு லெவல் வீரராக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் உருவெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் கம்பீர்.

Story first published: Tuesday, June 16, 2020, 13:12 [IST]
Other articles published on Jun 16, 2020
English summary
Gambhir believes Dhoni would have shattered several batting records if not sacrificed his batting slot
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X