For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

#DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்!

சென்னை : ட்விட்டரில் திடீரென சம்பந்தமே இல்லாமல் தோனி ஓய்வு பெறுவதை குறிக்கும் வகையில் #Dhoniretires என்ற ஹேஷ்டேக் டிரென்டிங் ஆனது.

Recommended Video

Sakshi Dhoni reacts to #DhoniRetires tweet

ஆனால், உண்மையில் தோனி அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்புறம் ஏன் இப்படி ஒரு டிரென்டிங்? என பலரும் குழம்பினர்.

இதன் பின்னணியை ஆராய்ந்து பார்த்த போது பெரும்பாலும் கோலி ரசிகர்கள் தான் இதை டிரென்டிங் செய்யத் துவங்கி உள்ளனர் என தெரிய வந்தது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்ட ட்வீட் தான் காரணம் என கூறப்படுகிறது.

விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்

தோனி கடைசி போட்டி

தோனி கடைசி போட்டி

தோனி கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் தான் கடைசியாக ஆடி இருந்தார். அதன் பின் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. சுமார் ஓராண்டாக அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

நீண்ட விலகல்

நீண்ட விலகல்

நீண்ட காலமாக இந்திய அணியில் ஆடாத நிலையில் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும், ஐபிஎல் தொடர் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்தது.

வதந்திகள்

வதந்திகள்

எனினும், அவ்வப்போது தோனி ஓய்வு பற்றி வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. ஒவ்வொரு முறையும் தோனி ரசிகர்கள் தோனி பற்றி, அவற்றின் சாதனைகள் பற்றி நெகிழ்ந்து குறிப்பிடுவதும், பின்னர் அது வெறும் வதந்தி என தெரிய வருவதும் சகஜமாக இருந்தது.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே பயிற்சி முகாமில் பங்கேற்ற தோனி மிகத் தீவிரமாக பயிற்சி செய்து வந்தார். அதை வைத்து அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட முயற்சி செய்கிறார் என கூறப்பட்டது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோனியின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி உள்ளது.

சிஎஸ்கே கிண்டல் பதிவு

சிஎஸ்கே கிண்டல் பதிவு

இந்த நிலையில், சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ட்விட்டர் பதிவு ஒன்றிற்கு பதில் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி "இந்த முறை கப் உங்களுக்கு தான்" (ஈ சாலா கப் உமதே) என குறிப்பிட்டு இருந்தது.

கோபத்தில் கோலி ரசிகர்கள்

கோபத்தில் கோலி ரசிகர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இது வரை ஐபிஎல் கோப்பை வென்றதே இல்லை. விராட் கோலி கேப்டன்சியும் அந்த அணிக்கு மோசமாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் ட்வீட் கோலி ரசிகர்களை சீண்டி விட்டது. அவர்கள் கோபம் அடைந்தனர்.

ட்விட்டர் டிரென்டிங்

ட்விட்டர் டிரென்டிங்

அப்போது முதல் தோனி ஓய்வு பெற்று விட்டார் என குறிப்பிட்டு #Dhoniretires என்ற ஹேஷ்டேக்கை வைரல் ஆக்கினர். அது பொய் என அறியாத பல தோனி ரசிகர்கள் தோனியின் சாதனைகளை பட்டியலிட அந்த ஹேஷ்டேக் டிரென்டிங் ஆனது.

தோனி ரசிகர்கள் பதிலடி

தோனி ரசிகர்கள் பதிலடி

இது கோலி ரசிகர்கள் வேலை தான் என கண்ட சில தோனி ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். இந்த மோதல் ட்விட்டரில் மிக மோசமாக நடந்து வருகிறது. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மோதி வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதும் போக்கு அதிகரித்து வருகிறது.

Story first published: Thursday, May 28, 2020, 12:50 [IST]
Other articles published on May 28, 2020
English summary
#DhoniRetires trending in twitter. Here is the reason. A CSK tweet could have triggered some Kohli fans to start this trending.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X