அடின்னா... இதுதான் அடி...! கடைசி ஓவரில் தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்.. தாறுமாறாக வைரலான வீடியோ

சென்னை:சேப்பாக்கத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தல தோனி, கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டியில், 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி சூப்பராக வெற்றி பெற்றது.

அதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அத்துடன், தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

ராஜஸ்தானுடனான போட்டியை அந்த அணியினர் மட்டுமல்ல... தோனி ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு தோனியின் அதிரடி முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

அந்தப் போட்டியில் 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். அதோடு, உனத்கட் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டினார். அவர் சிக்சர் அடித்து தூள் காட்டிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கன்னாபின்னாவென்று வைரலாகி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Dhonis hat – trcik sixer against rajasthan royals in ipl season, goes viral in social websites.
Story first published: Monday, April 1, 2019, 14:35 [IST]
Other articles published on Apr 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X