For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்கல்.. சஞ்சய் மஞ்சரேக்கரின் "ஷாக்" உரையாடல்.. வெளியான ஸ்க்ரீன் ஷாட்ஸ் - உண்மையா?

மும்பை: சஞ்சய் மஞ்சரேக்கர் இப்போது ஒரு புது சிக்கலில் சிக்கியிருக்கிறார். ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், அவருக்கு மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூன் 18ம் தேதி இரு நியூசிலாந்து உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுகிறது.

மெய்டன் ஓவரா போட்டுத் தாக்கிய சஹர்... 4 வருஷத்துல சிறப்பான பௌலிங் மெய்டன் ஓவரா போட்டுத் தாக்கிய சஹர்... 4 வருஷத்துல சிறப்பான பௌலிங்

இந்த பரபரப்பான சூழலில், அணியில் இடம் பிடித்துள்ள அஷ்வின் மற்றும் ஜடேஜா குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்நாள் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர்.

 அவர்கள் ATG கிடையாது

அவர்கள் ATG கிடையாது

அதாவது, அஷ்வினும், ஜடேஜாவும் "All Time Great" வீரர்கள் கிடையாது என்பதே அவரது வாதம் + பிடிவாதம். இதற்கு அவர் முன்வைக்கும் காரணம் இருவருமே, இந்தியாவில் தான் அதிக விக்கெட் வீழ்த்துவார்கள் என்பதே. இதுகுறித்து மஞ்சரேக்கர் கூறுவது என்னவெனில், "அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கையில் அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் 'எல்லா காலத்திலும் சிறந்த வீரர்' என அவரை கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அஸ்வினிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்த நாடுகளில் அஸ்வின் ஒரு முறை கூட 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது.

 வெளிநாடுகளில் ஜீரோ

வெளிநாடுகளில் ஜீரோ

அஸ்வினை போலவே தான் ரவீந்திர ஜடேஜாவும், இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். அதே போல கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினைவிட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பல வீரர்களும் இப்படி இருக்கும் போது அஸ்வினை எப்படி அனைத்து கால சிறந்த பவுலர் என்று கூறுவது?" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தார். இதற்கு அஷ்வின், 'அந்நியன்' படத்தின் மீம் ஒன்றை போட்டு பதிலடி கொடுக்க அது வைரலாக, மீண்டும் அந்த மீமுக்கு மஞ்சரேக்கர் பதிலடி கொடுக்க, அதற்கு ரசிகர்கள் அஷ்வின் சார்பாக பதிலடி கொடுக்க என்று விஷயம் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

 வெளியான ஸ்க்ரீன் ஷாட்ஸ்

வெளியான ஸ்க்ரீன் ஷாட்ஸ்

இந்த நிலையில் தான், ஒரு ட்வீட் ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் இருந்து சூர்ய நாராயணன் என்பவர், மஞ்சசேர்க்கருடன் தான் நடத்திய உரையாடல் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சஞ்சய் அந்த நபரிடம், "உங்களைப் போல என்னையும் வீரர்களை தரிசிக்க சொல்கிறீர்களா? நான் ரசிகன் அல்ல. அனலிஸ்ட். ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், அவரை பற்றி நான் கூறிய "Bits and Pieces" என்பது குறித்த அர்த்தம் அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது. யாரோ, அவரிடம் தவறாக அர்த்தம் கூறியிருக்கிறார்கள்" என்று ஸ்மைலி எமோஜிக்கள் சேர்த்து பதில் அளித்திருப்பது போன்று உள்ளது.

 எழும் சிக்கல்

எழும் சிக்கல்

இந்த ஸ்க்ரீன் ஷாட்ஸை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆனால், இதன் உண்மைத் தன்மை குறித்த எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், சஞ்சய் மஞ்சரேக்கர் அப்படி கூறினாரா என்பது குறித்தும் எந்த உறுதியான தகவலும் இல்லை. எனினும், இந்த கான்வெர்சேஷன் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சஞ்சய் நிச்சயம் பல சிக்கலைகளை எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.

Story first published: Tuesday, June 8, 2021, 20:28 [IST]
Other articles published on Jun 8, 2021
English summary
Did sanjay manjrekar comment about jadeja's english skill? - ஜடேஜா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X