For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியும், பாக். கேப்டனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி.. ஆனா இந்த விஷயத்தில் மட்டும்..!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் இளம் கேப்டன் பாபர் ஆசாம் - விராட் கோலி இடையே ஆன ஒப்பீடுகள் தினமும் நடந்து வருகிறது.

தற்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆமிர் சோஹைல் இருவருக்கும் இடையே ஆன வித்தியாசங்கள் பற்றி தன் யூட்யூப் வீடியோவில் அலசி ஆராய்ந்துள்ளார்.

 டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டா ஐபிஎல்ல நடத்தறதுக்கு பிசிசிஐக்கு உரிமையிருக்கு -ஹோல்டிங் டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டா ஐபிஎல்ல நடத்தறதுக்கு பிசிசிஐக்கு உரிமையிருக்கு -ஹோல்டிங்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி கடந்த 2008இல் இந்திய அணியில் அடி எடுத்து வைத்து பின் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் பல இளம் பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இடத்தை அடைய வேண்டும் என்பதே கனவாக உள்ளது.

பாபர் ஆசாம்

பாபர் ஆசாம்

தற்போது உள்ள பேட்ஸ்மேன்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், விராட் கோலிக்கு இணையாக ஆடுவதாக கூறப்படுகிறது. இதை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, மற்ற நாட்டு முன்னாள் வீரர்களும் கூறி உள்ளனர்.

பவுண்டரி

பவுண்டரி

இருவருக்கும் இடையே ஆன முக்கிய ஒற்றுமை, அவர்கள் ஷாட் ஆடுவது தான். இது பற்றி ஆமிர் சோஹைல் கூறுகையில், "இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை, இருவரும் 40 சதவீத ரன்களை பவுண்டரி மூலம் எடுக்கின்றனர்." என்றார்.

டிரைவ் ஆடும் விதம்

டிரைவ் ஆடும் விதம்

மேலும், "இருவரும் நல்ல டிரைவ் ஆடுகின்றனர். பிரன்ட் ஃபூட்டில் புல் ஷாட் அடிக்கின்றனர். இருவரும் ஆஃப்-சைடில் பந்தை லேசாக பிரன்ட் ஃபூட்டில் புஷ் செய்கின்றனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை தேர்ட் மேன் திசைக்கு தங்கள் ரிஸ்ட் மூலம் அனுப்பி வைக்கின்றனர். இவற்றில் இருவரும் வெற்றிகரமாக உள்ளனர்" என்றார்.

வித்தியாசம் இதுதான்

வித்தியாசம் இதுதான்

"விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருக்கிறார். ஆனால், பாபர் ஆசாம் அமைதியாக காணப்படுகிறார். ஒருவேளை பந்துவீச்சாளர்கள் மனதில் பயத்தை உண்டாக்க கோலி வெளியே ஆக்ரோஷத்தை காட்டி, உள்ளே அமைதியாக இருக்கக் கூடும்." என்றார்.

ஆக்ரோஷமாகவும் இருக்க வேண்டும்

ஆக்ரோஷமாகவும் இருக்க வேண்டும்

"பாபர் ஆசாம் களத்தில் தன் உணர்வுகளை கொண்டு வர வேண்டும். அவர் தன் பேட்டிங் மூலம் பந்துவீச்சாளர்களை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார். அவர் ஆக்ரோஷமாகவும் இருந்தால் நீண்ட நாள் பார்வையில் அது அவருக்கு உதவும்" என்றார் ஆமிர் சோஹைல்.

Story first published: Tuesday, June 9, 2020, 12:22 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
Aamir Sohail explained the main difference between Virat Kohli and Babar Azam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X