For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது நெருப்புடா.. நெருங்குடா..! 2018 பைனல் தோல்விக்கு பழி தீர்த்த திண்டுக்கல்.. பரிதாப மதுரை

Recommended Video

TNPL 2019 : Dindigul Vs Madurai : மதுரை அணியை பந்தாடிய திண்டுக்கல் டிராகன்ஸ்- வீடியோ

நெல்லை: 2018ம் ஆண்டு இறுதி போட்டியில் கிடைத்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் நடப்பு சாம்பியன் மதுரை பேந்தர்சை, 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்.

டிஎன்பிஎல் லீக்கின் 5வது போட்டி நெல்லையில் நடைபெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. டிஎன்பிஎல் வரலாற்றில் இது 100வது போட்டியாகும். எனவே, போட்டிக்கு முன்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் ஏதிரணியின் பந்து வீச்சை சிதறடித்து அபார தொடக்கம் தந்தனர். நிஷாந்த் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அஸ்வின் ஏமாற்றம்

அஸ்வின் ஏமாற்றம்

பின்னர் வந்த கேப்டன் அஸ்வின் 16 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறு முனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 51 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

182 ரன்கள் குவிப்பு

182 ரன்கள் குவிப்பு

இறுதியில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை பேந்தர்ஸ் தரப்பில் அந்த அணியின் ரஹில் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்தில் திண்டுக்கல் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் விக்கெட்டுக்கு கிடைத்த பார்ட்னர்ஷிப்பை பின்னர் வந்தவர்கள் பயன்படுத்தவில்லை.

முதல் விக். 50 ரன்கள்

முதல் விக். 50 ரன்கள்

அதன் பிறகு 183 ரன்களை நோக்கி களம் இறங்கிய மதுரை பேந்தர்ஸ் தொடக்க ஓவர்களில் சற்று திணறினாலும் பின்னர் சுதாரித்து ஆடியது. அந்த அணியின் ஓப்பனர்கள் கார்த்திக், சரத் ராஜ் இருவரும் அற்புதமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தனர்.

நிலைக்காத வீரர்கள்

நிலைக்காத வீரர்கள்

ஆனால், இந்த ஜோடி அதன் பின்னர் நிலைக்கவில்லை. அருண் கார்த்திக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 51 ரன்கள் என்றிருந்த போது, சரத் ராஜ் வெளியேறினார். அதற்கு பிறகு யாரும் அணியில் நிலைக்கவில்லை.

சிலம்பரசன் அபாரம்

சிலம்பரசன் அபாரம்

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஆட்டம் முழுவதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இளம் வீரர் சிலம்பரசன் அபாரமாக பந்துவீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். முதல் 3 வீரர்களை அவுட்டாக்கி, மதுரை பேந்தர்சுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

திண்டுக்கல் வெற்றி

திண்டுக்கல் வெற்றி

இருப்பினும், பின்வரிசை வீரர்கள் ஓரளவு அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. விக்கெட்டுகள் விழுந்தன. ரன் ரேட் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்று இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக். இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Story first published: Monday, July 22, 2019, 23:35 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
Dindigul dragons won by 30 runs against Madurai panthers in tnpl series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X