For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்.. டி20 கிரிக்கெட்டில் எந்த இந்தியரும் செய்யல

டிரிண்டாட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 190 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே அடித்தது.

கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு.. ஐ.நா அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்.. பரபரப்பான வீடியோ இதோகிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு.. ஐ.நா அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்.. பரபரப்பான வீடியோ இதோ

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கலக்கினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தக்கு எதிரான டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக், 11, 12 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

விமர்சனம் உடைப்பு

விமர்சனம் உடைப்பு

இது தினேஷ் கார்த்திக்கிற்கு கொஞ்சம் சரிவாக காணப்பட்டது. இதனால் டி20 உலக கோப்பையில் இடம்பெற வேண்டும் என்றால் கார்த்திக், இந்த தொடரில் சாதிக்க வேண்டும் என்று விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறிய போது களமிறங்கிய கார்த்திக், தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதன் மூலம் 19 பந்துகளில் கார்த்திக், 41 ரன்களை விளாசி இருக்கிறார்.இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். கார்த்திக்கின் இந்த ஆட்டத்தால், 140 ரன்கள் அடிக்க வேண்டிய இந்திய அணி அணி 190 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தின் மூலம் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் பினிஷிங் ரோலுக்கு கார்த்திக் உறுதி செய்துவிட்டார்.

தோனி சாதனை முறியடிப்பு

தோனி சாதனை முறியடிப்பு

இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனியே செய்யாத சாதனை ஒன்றை கார்த்திக் செய்துள்ளார். அதாவது பேட்டிங் வரிசையில் 5 அல்லது அதற்கு கீழ் இறங்கி 5 முறை 200 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேல் 25 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திக் படைத்துள்ளார்.

சாதனை விவரம்

சாதனை விவரம்

41* (19) v வெஸ்ட் இண்டீஸ் 2022

55 (27) v தென்னாப்பிரிக்கா, 2022

33* (16) v நியூசிலாந்து, 2019

30 (13) v ஆஸ்திரேலியா, 2018

29* (8) v வங்கதேசம், 2018 - (நிதாஷ் கோப்பை இறுதி ஆட்டம்)

Story first published: Saturday, July 30, 2022, 20:24 [IST]
Other articles published on Jul 30, 2022
English summary
Dinesh Karthik created unique record in t20 cricket for team india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X