For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூணு கேப்டன்களும் வேற மாதிரி.. தோனி, கோலி, ரோஹித் - வித்தியாசம் சொல்லும் தினேஷ் கார்த்திக்!

மும்பை : இந்திய அணியில் கோலி, ரோஹித், தோனி என தற்போது மூன்று கேப்டன்கள் அணியில் ஆடி வருகிறார்கள்.

இவர்கள் மூவருக்கு கீழும் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் இவர்கள் கேப்டன்சியில் உள்ள வித்தியாசத்தை சுட்டிக் காட்டியுள்ளார். அது என்ன வித்தியாசம்?

இந்த சிறிய மாற்றம் தான் தோனியின் அதிரடி ரன் குவிப்புக்கு காரணம்.. என்ன அது? இந்த சிறிய மாற்றம் தான் தோனியின் அதிரடி ரன் குவிப்புக்கு காரணம்.. என்ன அது?

மூன்று கேப்டன்கள் எப்படி?

மூன்று கேப்டன்கள் எப்படி?

இந்திய அணியில் தற்போது கோலி தான் கேப்டன். எனினும், சுழற்சி முறையில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருவதால், கோலி ஓய்வு பெரும் நேரங்களில் ரோஹித் சர்மா கேப்டன் வாய்ப்பு பெற்று வருகிறார். தோனி பல கோப்பைகள் வென்று கொடுத்த முன்னாள் கேப்டன்.

அணுகுமுறை வேறு

அணுகுமுறை வேறு

இவர்கள் மூவரும் ஒரே அணியில் ஆடினாலும், கேப்டன் பொறுப்பில் இவர்களின் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருக்காது என்கிறார் தினேஷ் கார்த்திக். இவர்கள் போட்டியில் முடிவு எடுப்பதும் வித்தியாசமாகவே இருக்கும் என தினேஷ் கார்த்திக் கூறுவதில் இருந்து தெரிகிறது.

தோனியின் உள்ளுணர்வு

தோனியின் உள்ளுணர்வு

தோனி உள்ளுணர்வு சார்ந்த கேப்டன். அவர் பல முடிவுகளை களத்தில், அந்த கணத்தில் தான் எடுப்பார். என கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த விஷயம் தான் தோனியின் தனித்துவம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதை உறுதிப்படுத்தியுள்ளார் தினேஷ்.

கோலி ஆக்ரோஷமான கேப்டன்

கோலி ஆக்ரோஷமான கேப்டன்

கோலி மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். எதிரணியோடு மோத வேண்டும் என எண்ணமுள்ளவர். அவர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். ஒரு பேட்ஸ்மேனாகவும், தலைவராகவும் தன் திறனை உயர்த்திக் கொண்டே செல்கிறார் என்றார் தினேஷ்.

ரோஹித் சர்மா எப்படி?

ரோஹித் சர்மா எப்படி?

அடுத்து ரோஹித் சர்மா கொடுத்து பேசினார். ரோஹித் எப்போதும் போட்டிக்கு முன்னதாகவே திட்டங்களை தயார் செய்வார். மிகுந்த திட்டமிட்டு செயல்படக் கூடியவர். எப்போதும் அணுகும் வகையில் இருப்பார். தன் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களிடம் தானே போய் பேசுவார் என ரோஹித் பற்றி கூறினார் தினேஷ்.

Story first published: Friday, February 15, 2019, 18:02 [IST]
Other articles published on Feb 15, 2019
English summary
Dinesh Karthik explains the difference between the captaincy of Dhoni, Kohli and Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X