For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள்.. சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்.. "வெற்றிக்கு டிராவிட் காரணம்" –DK

ராஜ்காட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

Recommended Video

Dinesh Karthik கண்ட கனவு! Comeback கொடுத்ததில் Happy! | Aanee's Appeal | *Cricket

தினேஷ் கார்த்திக்கின் இன்னிங்ஸ் நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, இந்திய அணி முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடன் விளையாடியது.

தினேஷ் கார்த்திக்கின் மரண பேட்டிங்.. 26 பந்துகளில் அரைசதம்.. காலை வாரிய பண்ட், ஸ்ரேயாஸ்தினேஷ் கார்த்திக்கின் மரண பேட்டிங்.. 26 பந்துகளில் அரைசதம்.. காலை வாரிய பண்ட், ஸ்ரேயாஸ்

16 ஆண்டுகள்

16 ஆண்டுகள்

இந்தியாவின் முதல் போட்டியில் 21 வயதான தினேஷ் கார்த்திக் இடம்பெற்று இருந்தார். தற்போது 16 ஆண்டுகள் கழித்து, முதல் போட்டியில் விளையாடிய யாரும் தற்போது கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் மட்டும் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய கார்த்திக், மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

அழுத்தம் இல்லை

அழுத்தம் இல்லை

தற்போது உள்ள அணியில் பாதுகாப்பாக உணர்கிறேன். கடந்த போட்டியில் கூட நான் நினைத்தது போல் ஆட முடியவில்லை. ஆனால் அந்த ஆட்டத்தில் சுதந்திரமாக , எவ்வித அழுத்தமும் இன்றி விளையாட நினைத்தேன். இப்போது எல்லாம் நான் நன்றாக யோசிக்கிறேன். போட்டியின் சூழல் குறித்து கண்டறிகிறேன். இது எல்லாம் பயிற்சியால் தான் உணர முடியும்.

பெங்களுரு மைதானம்

பெங்களுரு மைதானம்

நான் களத்துக்கு வந்த போது, ஹர்திக் என்னிடம் வேண்டிய நேரத்தை எடுத்து கொள்ளுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றார். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் கடைசி வரை நிற்க வேண்டியது அவசியம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி போட்டி தான் வெற்றியாளர்களை தீர்மானிக்கப் போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு எனக்கு சொந்த மைதானம் போன்றது. ஆர்சிபி அணிக்காக பெங்களூருவில் விளையாடியது இல்லை. ஆனால் பெங்களூருவில் நிறைய போட்டியில் விளையாடி இருக்கிறேன்.

டிராவிட் தான் காரணம்

டிராவிட் தான் காரணம்

அனைத்து புகழும் எங்களுடைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு தான் இந்திய அணியில் தற்போது யாரும் பதற்றமாக இருப்பதில்லை. ஒரு பாதுகாப்பான உணர்வு இருக்கிறது. அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று கற்று கொள்கிறோம். இவை அனைத்திற்கும் ராகுல் டிராவிட் தான் காரணம்.

Story first published: Saturday, June 18, 2022, 17:13 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
Dinesh karthik is giving credits to Rahul dravid for his performance டி20 கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள்.. சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்.. "வெற்றிக்கு டிராவிட் காரணம்" –DK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X