அவருக்கு இந்திய அணியில் வேலை இல்ல.. எங்க கூட கமெண்டரி பண்ண சொல்லுங்க.. DK வை சீண்டிய முன்னாள் வீரர்

சென்னை:தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணணையாளராக பணிபுரிந்த கார்த்திக், கடின உழைப்பு மூலம் டி20 அணியில் இடம் பிடித்து இளைஞர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகிறார்.

தற்போது தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் கடினமானது. இதனால், பெரிய ஷாட் ஆடி ரன் குவிக்கும் கார்த்திக்கிற்கு சில சமயம் முயற்சி பலன் அளிக்காமல் போய் விடுகிறது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

விமர்சனம்

விமர்சனம்

எனினும் தினேஷ் கார்த்திக்கின் அனுபவத்தின் மீதும் திறமை மீதும் நம்பிக்கை வைத்துள்ள ரோகித், டிராவிட் கூட்டணி, அவருக்கு ஆசிய கோப்பையில் இடம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கியது குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்து கேலி செய்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சில குறைகள் உள்ளன. நானாக இருந்தால் முதலில் முகமது ஷமியை தான் அணியில் சேர்த்திருப்பேன். பும்ரா, ஆர்ஸ்தீப், சாஹல் என மூன்று வீரர்களும் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். இதே போன்று பேட்டிங்கில் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகிய 4 பேரும் அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

தேவையில்லை

தேவையில்லை

இந்த மாதிரி அணியில் இருந்தால் நீங்கள் யாரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதிரடியாக ஆடும் அணியை தேர்வு செய்ய வேண்டும் என்றால் சில முடிவை எடுக்க வேண்டும். ரோகித், கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்றால் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடமில்லை.

ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

இந்த நவீன கால கிரிக்கெட்டில் அணியில் நான் தினேஷ் கார்த்திக்கை சேர்க்க மாட்டேன். அவர் நன்றாக கிரிக்கெட் வர்ணணை செய்வார். அதனால் தினேஷ் கார்த்திக்கை என் அருகில் உட்கார வைத்து விடுங்கள். அஜய் ஜடேஜாவின் இந்த பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஜடேஜா பொறாமையில் பேசுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dinesh Karthik is good commentator not fit for team – EX Player comments made fans angry அவருக்கு இந்திய அணியில் வேலை இல்ல.. எங்க கூட கமெண்டரி பண்ண சொல்லுங்க.. DK வை சீண்டிய முன்னாள் வீரர்
Story first published: Wednesday, August 10, 2022, 16:37 [IST]
Other articles published on Aug 10, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X