For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சிக்கு வரவில்லையா தினேஷ் கார்த்திக்..? ஷாக் கொடுத்த டிராவிட்... ஏமாற்றத்தில் தமிழக வீரர்

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், இன்று நடைபெற்ற பயிற்சி முகாம் தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் இல்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணியின் தேர்வு எப்படி? பலம், பலவீனம் என்ன?தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணியின் தேர்வு எப்படி? பலம், பலவீனம் என்ன?

புதிய குழப்பம்

புதிய குழப்பம்

தினேஷ் கார்த்திக்கை பினிஷர் ரோலுக்காக தான் தேர்வுக்குழுவினர் இந்திய அணியில் தேர்வு செய்தனர். ஆனால் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஏற்கனவே அணியில் உள்ளனர். இந்த நிலையில், மிடில் ஆர்டரில் 3வது வீரராக இஷான் கிஷனையும், 4வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரையும், 5வது வீரராக தீபக் ஹூடாவையும் சேர்க்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

பயிற்சியில் இல்லை

பயிற்சியில் இல்லை

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பயிற்சி முகாமில் இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். மேலும் ஹர்திக் பாண்டியா மீது ராகுல் டிராவிட் தனி கவனம் செலுத்தி ஏதோ அறிவுரைகளை கூறி இருந்தார். எப்போதும் பயிற்சி முகாமில் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்களுக்கு தான் அதிக நேரம் பேட்டிங் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்,

இளம் வீரருக்கு வாய்ப்பு

இளம் வீரருக்கு வாய்ப்பு

பிளேயிங் லெவனில் இல்லாதவர்களுக்கு கடைசியாக தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. மேலும் தீபக் ஹூடா சுழற்பந்தும் நன்றாக வீசுவார். மேலும் லக்னோ அணிக்காக ராகுல் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எப்போது வாய்ப்பு?

எப்போது வாய்ப்பு?

இதனால் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பதை விட தீபக் ஹூடாவை தான் அணியில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ஐபிஎல் தொடர் போது ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் தற்போது ராகுல் விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக்கிற்கு கதவு திறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

Story first published: Wednesday, June 8, 2022, 20:34 [IST]
Other articles published on Jun 8, 2022
English summary
Dinesh Karthik is in doubtful for 1st t20 vs SA தினேஷ் கார்த்திக்கிற்கு ஷாக் கொடுத்த டிராவிட்.. இளம் வீரருக்கு முன்னுரிமை.. பயிற்சியிலும் இல்லை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X