For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கனுக்கு எதிரான உத்தேச அணி..? காயம் தரும் அதிர்ச்சி, கடைசி நிமிடம் வரை குழம்பும் இந்தியா

சவுதாம்ப்டன்:ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் இடம் பெற வில்லை எனில் அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாராவது ஒருவர் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.

சவுதாம்படன் நகரில் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள ஆப்கானிஸ்தான், வலிமையான இந்தியாவை எதிர்கொள்கிறது. போட்டியில் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ரசிகர்களின் கருத்துகளும் அதையே தான் பிரதிபலிக்கின்றன.

இந் நிலையில் ஆப்கானிஸ்தான் எப்படி இந்திய அணியை எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலக கோப்பையில் இதுவரை இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி ஒருமுறை கூட விளையாடியது இல்லை.

அனைத்திலும் தோல்வி

அனைத்திலும் தோல்வி

ஆகவே அவசரப்படாமல் வங்கதேசம் போன்று நிலைத்து நின்று ஆடினால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இந்தியா, 4 போட்டிகளில் 3 வென்று 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

காயம் தரும் அதிர்ச்சி

காயம் தரும் அதிர்ச்சி

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறி கொண்டிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காயத்தால் ஷிகர் தவான் தொடரிலிருந்தே விலகியுள்ளார். புவனேஸ்வர் குமார் அடுத்த 3 போட்டிகளுக்கு விளையாட முடியாத நிலை இருக்கிறது.

உடல்நிலை முன்னேற்றம்

உடல்நிலை முன்னேற்றம்

பயிற்சியின் போது பந்து தாக்கி கால்பாதத்தில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் ஓரளவு தேறி விட்டார். ஒருவேளை அவர் விளையாடா விட்டால் அவருக்குப் பதிலாக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முழு உடல்தகுதியை எட்டாவிட்டால் இளம் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் அல்லது அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப் படலாம்.

விளையாட இயலும்

விளையாட இயலும்

முன்னதாக, விஜய் சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் என்னால் விளையாட இயலும் என்று நம்புகிறேன். இன்னும் என்னால் சிறப்பாக பவுலிங் செய்ய முடியும்.

சிறந்த பந்துவீச்சாளர்

சிறந்த பந்துவீச்சாளர்

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவருட ன்ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்காக இணைந்து ஆடிய அனுபவம் உள்ளது. அதன் மூலம் அவரது பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

யார்? யார்?

யார்? யார்?

போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச வீரர்கள் விவரம்:லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பன்ட், தோனி, விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

Story first published: Saturday, June 22, 2019, 13:51 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
Dinesh karthik or rishab pant, any one likely to replace vijay shankar in todays match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X