For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழக வீரரின் பேட்டால் தான் ரோகித்-க்கு திருப்புமுணை... 2007ல் நடந்த அந்த சம்பவம்.. சுவாரஸ்ய தகவல்!

மும்பை: ரோகித் சர்மாவின் வாழ்கையை மாற்றிய முதல் அரைசதம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா உருவெடுத்துள்ளார். 2007ம் ஆண்டு இவர் அறிமுகமானாலும் 2013ம் ஆண்டு தான் அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி செய்தி.. புவனேஷ்வர்குமார் வீட்டில் நடக்கும் விஷயங்கள்..இலங்கை டூரும் சந்தேகம் அடுத்தடுத்து அதிர்ச்சி செய்தி.. புவனேஷ்வர்குமார் வீட்டில் நடக்கும் விஷயங்கள்..இலங்கை டூரும் சந்தேகம்

கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன் டிராப்பியில் ரோகித் சர்மாவை முதல் முதலில் ஓப்பனராக களமிறக்கினார். அப்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி. அன்று முதல் இன்று வரை தொடக்க வீரராக இந்திய அணியில் திகழ்ந்து வருகிறார்.

2007ல் நடந்த சம்பவம்

2007ல் நடந்த சம்பவம்

இன்று உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் தான் முதன்முதலில் அரைசதம் அடித்து அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச போட்டியில் இடம்பெறாமல் உள்ளார். இவர் தற்போது 2007ல் நடந்த டி20 உலகக்கோப்பை நினைவுகளை மனம் திறந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் பேட்

தினேஷ் கார்த்திக் பேட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஷான் பொல்லாக். அப்போது தினேஷ் கார்த்தி கடும் விரக்தியில் அவரது பேட் குறித்து தவறாக பேசி வருத்தப்பட்டுள்ளார். அதனை கேட்ட ரோகித், உனது பேட் சரியில்லை என நினைக்கிறாயா எனக்கூறி, அதைக்கொடு நான் விளையாடி பார்க்கிறேன் என களத்திற்கு சென்று அதிரடி காட்டியுள்ளார்.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, 40 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். 11வது ஓவரில் 61 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, ரோகித்தின் பேட்டிங்கால் 20 ஓவர்களில் 154 ரன்களை எட்டியது. இதன்பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த போட்டிக்கு பிறகு ரோகித் சர்மாவுக்கு அணியில் சற்று வாய்ப்புகள் அதிகரித்தது.

அனுபவம்

அனுபவம்

இதுவரை 227 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 9205 ரன்களை குவித்துள்ளார். அதே போல 38 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 2615 ரன்களை விளாசியுள்ளார். ரோகித் சர்மா இதுவரை சர்வதேச அளவில் 40 சதங்களும் 77 அரை சதங்களும் அடித்துள்ளார்.

Story first published: Tuesday, June 1, 2021, 19:58 [IST]
Other articles published on Jun 1, 2021
English summary
Dinesh Karthik Recalls Rohit Sharma’s first-ever international fifty was with his bat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X