வர்ணனையாளர் டூ கிரிக்கெட் வீரர்- தினேஷ் கார்த்திக் சாதித்தது எப்படி? வெற்றி ரகசியம் இது தான்

மும்பை: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019ஆம் ஆண்டு உலககோப்பையில் தான் இந்திய அணிக்காக களமிறங்கினார்.

ஆனால், அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஐபிஎல் தொடரிலும் சொதப்பியதால் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்

கிரிக்கெட் வர்ணனையாளர்

கிரிக்கெட் வர்ணனையாளர்

இதன் பிறகு கொரோனா காலக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக், இங்கிலாந்து சென்று அங்குள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிப்புரிந்தார். அதில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் தொடர்ந்து பல வாய்ப்புகள் வர்ணனையாளராக செயல்பட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தங்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மிட்சம் இருப்பதாக ரோகித் கூறினார்.

தினேஷ் கார்த்திக் சபதம்

தினேஷ் கார்த்திக் சபதம்

இதனையடுத்து 2021ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு கார்த்திக், கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழக ரஞ்சி அணியிலும் வாய்ப்பு இல்லை. இதனால் கார்த்திக் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என்று ரசிகர்களும் நினைத்தனர். ரிஷப் பண்டும் விக்கெட் கீப்பராக ஆதிக்கம் செலுத்தியதால் , தினேஷ் கார்த்திக் பெயர் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படவில்லை. ஆனால் கார்த்திக் அப்போது ஒரு சபதம் எடுத்தார்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இன்னும் ஒரு முறை, இந்திய அணிக்காக விளையாட வேண்டும். டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற வேண்டும் என்றால், அதற்கு ஐபிஎல் தொடரில் சாதிக்க வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்கு ஏற்றார் போல், ஆர்சிபி அணியும், தினேஷ் கார்த்திக்கை பினிஷர் ரோலுக்கு தயாராகும் படி கூறியது. இதனையடுத்து, கடந்த 3 மாதமாக தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

அதாவது போட்டியில் இருக்கும் நெருக்கடியான சூழலை மனதில் கற்பனை செய்து கொண்டு, வலைப் பயிற்சியில் அதற்கு ஏற்றார் போல் ஷாட்களை விளையாடி பயிற்சி மேற்கொண்டார். இதற்கு நல்ல பலன் தந்தது ஆர்சிபி அணிக்காக 14 போட்டியில் விளையாடி 150 பந்துகளில் 287 ரன்களை விளாசினார். ஸ்ட்ரைக் ரேட் 191 ஆக இருந்தது. இதன் மூலம் இந்திய அணியில் இடமும் உறுதியானது.

வெற்றி ரகசியம்

வெற்றி ரகசியம்

இது குறித்து சமூக வலைத்தளத்தில் தனது வெற்றி ரகசியம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், உங்களை நீங்கள் நம்பினால், நீங்கள் நினைத்தது எல்லாம் தன்னால் நடக்கும் என்று குறிப்பிட்ட தினேஷ் கார்த்திக் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. கடின உழைப்பு மீண்டும் தொடர்கிறது என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க தொடரில் கார்த்திக் ஜொலித்தால் , இன்னும் பல வாய்ப்புகள் அவரை தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dinesh Karthik Reveals the success mantra after selected for team India வர்ணனையாளர் டூ கிரிக்கெட் வீரர்- தினேஷ் கார்த்திக் சாதித்தது எப்படி? வெற்றி ரகசியம் இது தான்
Story first published: Monday, May 23, 2022, 7:53 [IST]
Other articles published on May 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X