அனைவராலும் கழட்டிவிடப்பட்ட குல்தீப்.... தோள்கொடுத்த தமிழக வீரர்... என்ன மனுஷன்யா?

புனே: பலராலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள குல்தீப் யாதவுக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தோள் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ!

இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

ஏன்

ஏன்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட குல்தீப் யாதவ் பெரிய அளவில் சோபிக்க தவறிவிட்டார். முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் 68 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அப்போதே தொடங்கிவிட்டது இவரை நீக்க வேண்டும் என்ற பேச்சு. ஆனால் அதனை வலுப்படுத்தும் விதமாக அமைந்தது 2வது ஒருநாள் போட்டி.

 கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

2வது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் மொத்தமாக 84 ரன்களை தாரைவார்த்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் 8 சிக்ஸர்களை இங்கிலாந்து வீரர்கள் பறக்க விட்டனர். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் குல்தீப் யாதவ். இதனால் இணையத்தில் குல்தீப் யாதவை வருத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

ஆதரவு

ஆதரவு

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் தனிப்பட்ட முறையில் மிகவும் பாவமானவர். நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் சென்றுள்ளார். அவர் இரண்டு போட்டிகளிளேயே ஆடியுள்ளார். அவர் இதுபோன்று ஆடக்கூடியவர் அல்ல. ஆனால் சர்வதேச வீரர்களுக்கு இது சகஜமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

கம்பேக் தரவேண்டும்

கம்பேக் தரவேண்டும்

அவர் மீண்டும் தன்னை நிரூபிக்க அடுத்த 2 மாதங்கள் மிக முக்கியமானது. சர்வதேச போட்டிகளில் இல்லை, ஐபிஎல் போட்டியில்தான். எனவே அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு, நம்பிக்கையுடன் மீண்டும் வலிமையாக திரும்பி வரவேண்டும். ஐபிஎல்-ல் கூட நீங்கள் பெஸ்ட் என்பதை காட்டலாம். எனவே தயாராகுங்கள் குல்தீப் என தெரிவித்துள்ளார்.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

2வது ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருபுறம் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு புறம் கே.எல்.ராகுலை போன்று குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dinesh Karthik supported kuldeep yadhav even after his poor bowling in 2nd ODI
Story first published: Sunday, March 28, 2021, 15:49 [IST]
Other articles published on Mar 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X