For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன இப்படி இறங்கிட்டாரு.. தினேஷ் கார்த்திக் எடுத்த அதிர வைக்கும் முடிவு.. அப்போ அவ்வளவுதானா?

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எடுத்து இருக்கும் முடிவு ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் அகமதாபாத் மைதானத்தில் 5 டி 20 போட்டிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இதில் விக்கெட் கீப்பர்களாக கே. எல் ராகுல், இஷான் கிஷான், பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்திய அணியில் இணைய வேண்டும் என்று கடந்த 4-5 வருடங்களாக தினேஷ் கார்த்திக் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக கடுமையான பயிற்சி எடுத்தவர் இலங்கையில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டார். அதன்பின் உலகக் கோப்பை அணியிலும் இந்தியா சார்பாக ஆடினார்.

எப்படி

எப்படி

ஆனால் போக போக இவரின் பார்ம் மோசமாகிக் கொண்டே சென்றது. இதனால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் சொதப்ப தொடங்கினார். இதனால் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்குள் இணைவது கேள்விக்குறியானது.

 பார்ம் இல்லை

பார்ம் இல்லை

பண்ட், இஷான் கிஷான், கே. எல் ராகுல் என்று இளம் கீப்பர்கள் எல்லோரும் நன்றாக ஆடுவதால் தினேஷ் கார்த்திக்கின் வாய்ப்பு மொத்தமாக கேள்விக்குறியானது. இதனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கமெண்ட்ரி பக்கம் தினேஷ் கார்த்திக் கவனத்தை திருப்ப தொடங்கி உள்ளார்.

இந்தியா இங்கிலாந்து

இந்தியா இங்கிலாந்து

அதன்படி இந்தியா இங்கிலாந்து இடையிலான டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் கமென்ட்ரி செய்ய உள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் கமெண்ட்ரி குழுவில் இவர் இணைய இருக்கிறார். தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

கஷ்டம்

கஷ்டம்

இந்திய அணியில் இணைவது கஷ்டம் என்பது தினேஷ் கார்த்திக்குக்கு தெரிந்துவிட்டது. இதன் காரணமாகவே அவர் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். விரைவில் அவர் ஓய்வு பெற்றால் கூட ஆச்சர்யப்படுத்துவதற்கு இல்லை என்கிறார்கள்.

Story first published: Tuesday, February 23, 2021, 9:49 [IST]
Other articles published on Feb 23, 2021
English summary
Tamilnadu player Dinesh Karthik will be doing commentary for the England vs India T20 and ODI series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X