For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏங்க.. ஆயிரம் இருந்தாலும் கோலி நம்ம கேப்டன்.. இப்படி கலாய்க்கிறீங்க... வருத்தப்படும் வாரிசு நடிகர்

Recommended Video

கோலி நம்ம கேப்டன்!.. இப்படி கலாய்க்கிறீங்க?.. வருத்தப்படும் வாரிசு நடிகர்- வீடியோ

சென்னை:கோலியை அனைவரும் விமர்சிப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கடும் சோதனையில் சிக்கி தவித்து வருகிறது. விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி.. மேல் தோல்வி. அணியின் மீது கடும் விமர்சனங்கள்.

கோலி.. ஒரு அப்பரண்டிஸ் கேப்டன்.. ஓய்வெடுப்பது நல்லது என்று அவரின் மீது பாயாத ஆட்கள் இல்லை. பலரும் பல விதமான கருத்துகளை கூறி வருகின்றனர். 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இன்னமும் ஒரு புள்ளியைக் கூட பெறாமல் போராடி வருகிறது என் மீம்சுகளும் இறக்கை கட்டி பறக்கின்றன.

ஹர்பஜன், இம்ரான் தாஹிர்.. 2 பேரும் சரக்கு மாதிரி.. தோனி ஏன் இப்படி சொன்னாரு? ஹர்பஜன், இம்ரான் தாஹிர்.. 2 பேரும் சரக்கு மாதிரி.. தோனி ஏன் இப்படி சொன்னாரு?

ஆதரவான டுவீட்

இந்நிலையில் இயக்குநரும், நடிகர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்: அவர் அதில் கூறியிருப்பதாவது:

மனதுக்கு கஷ்டம்

மனதுக்கு கஷ்டம்

விராட் கோலியை அனைவரும் கேலி கிண்டல் செய்கின்றனர். அதனை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒரு கட்டம் வரையில் அது வேடிக்கையாக இருந்தது.

6 போட்டிகளிலும் தோல்வி

6 போட்டிகளிலும் தோல்வி

ஆனால் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை பெற்றிருப்பது என்பது இதயத்தை சுக்கு நூறாக்குகிறது. கேப்டன் என்ற முறையில் கோலி தமது பங்களிப்பை சரியாக செய்கிறார்.

கோலி தான் கேப்டன்

கோலி தான் கேப்டன்

ஆனால் கிரிக்கெட் என்பது வேறு. அணியில் உள்ள அனைவரும் பங்களிக்க வேண்டிய ஆட்டமாகும். மேலும் அவர் நம் உலக கோப்பை அணியின் கேப்டன்.

நம்பிக்கை உண்டு

நம்பிக்கை உண்டு

அவர் எப்போதையும் விட இன்னும் வலுவாக மீண்டு வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது... அதை தான் உண்மையில் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 10, 2019, 11:30 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
Director Bhagyaraj's son and actor Shanthnu has said that everyone criticizing Kohli has caused much pain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X