For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன பண்ணி வைச்சுருக்கீங்க? ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா? பொங்கி எழுந்த ரசிகர்கள்!

Recommended Video

Dravid fans slams ICC, BCCI

மும்பை: தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட்டை அவமரியாதை செய்யும் வகையில் நடைபெற்ற இரண்டு விஷயங்களை கண்டு இந்திய ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

ஒரே நாளில் நடந்த இந்த இரு வேறு விஷயங்களை செய்து சர்ச்சையில் சிக்கி இருப்பது ஐசிசி மற்றும் பிசிசிஐ.

டிராவிட் குறித்து சர்ச்சை கிளப்பிய இரண்டு கிரிக்கெட் அமைப்புகளையும் ரசிகர்கள் கேள்வி கேட்டு விமர்சித்து உள்ளனர்.

ஹால் ஆஃப் ஃபேம்

ஹால் ஆஃப் ஃபேம்

ஐசிசி கடந்த ஆண்டு ராகுல் டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் ஃபேம் எனும் மரியாதையை அளித்தது. ஜாம்பவான்களுக்கு அளிக்கப்படும் இந்த மரியாதையை டிராவிட் பெற்றது மகிழ்ச்சி தான் என்றாலும், தன் இணையதளத்தில் ஒரு சிறிய தவறை செய்தது ஐசிசி.

இடது கை பேட்ஸ்மேன்?

இடது கை பேட்ஸ்மேன்?

ஐசிசி இணையதளத்தில் ஹால் ஆஃப் ஃபேம் வீரர்கள் குறித்த பகுதியில் ராகுல் டிராவிட் பற்றி குறிப்பிடும் போது இடது கை பேட்ஸ்மேன் என குறிப்பிட்டு இருந்தது. அதைக் கண்டு ரசிகர்கள் கோபம் கொண்டனர்.

ட்விட்டரில் பொங்கினர்

ட்விட்டரில் பொங்கினர்

வலது கை பேட்ஸ்மேன் ஆன ராகுல் டிராவிட்டை இடது கை பேட்ஸ்மேன் என்றா குறிப்பிடுவது? இது தான் ராகுல் டிராவிட்டுக்கு அளிக்கும் மரியாதையா? என ட்விட்டரில் பொங்கித் தீர்த்துள்ளனர் இந்திய ரசிகர்கள். அவற்றில் சில -

சர்வதேச அமைப்பு செய்த தவறு

ஐசிசி குடித்து இருக்கிறீர்களா? இல்லை வேறு ஏதேனும் வகையில் உச்சகட்ட போதையில் இருக்கிறீர்களா? ராகுல் டிராவிட் எப்போது இடது கையில் பேட்டிங் செய்தார்? ஒரு சர்வதேச அமைப்பால் ஜாம்பவான் ஒருவர் குறித்த குறிப்புகளை சரியாக கொடுக்க முடியவில்லை.

இது கூட தெரியாதா?

16 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி ஏராளமான ரன்கள் குவித்து, சதம், அரைசதம் அடித்து இருக்கும் ராகுல் டிராவிட் வலது கை பேட்ஸ்மேனா? அல்லது இடது கை பேட்ஸ்மேனா? என உங்களுக்கு தெரியவில்லையா?

பிசிசிஐ செய்தது

பிசிசிஐ செய்தது

அடுத்து பிசிசிஐ செய்த தவறு, கொஞ்சம் நகைச்சுவையானது தான் என்றாலும், சிலர் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு திட்டியும் வருகிறார்கள். சிலர் ரவி சாஸ்திரியை கலாய்த்தும் வருகிறார்கள்.

இரண்டு சிறந்த நபர்கள்

பிசிசிஐ வெளியிட்ட ட்வீட் ஒன்றில் ரவி சாஸ்திரியுடன், ராகுல் டிராவிட் பேசிக் கொண்டு இருக்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. அதைக் குறிப்பிட்டு "இந்திய அணியின் இரண்டு சிறந்த நபர்கள் சந்தித்துக் கொண்டார்கள்" என குறிப்பிட்டு இருந்தது.

இது என்ன ஜோக்கா?

பலரும் ரவி சாஸ்திரியை சிறந்த வீரர் என ஒப்புக் கொள்ளவில்லை. அது பற்றிய பதிவுகளில் சில - இது என்ன ஜோக்கா? தயவு செய்து அவமரியாதை செய்யாதீர்கள் என கூறியுள்ளார் இவர்.

ரவி சாஸ்திரி சம்பாதிக்கிறார்

ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு இந்தியா ஏ, அண்டர் 19 போன்ற அணிகளில் பயிற்சி அளித்து திறமையானவர்களாக மாற்றி அனுப்பி வைக்கிறார். அந்த திறமையான வீரர்களை வைத்து ரவி சாஸ்திரி சம்பாதிக்கிறார் என கூறி உள்ளார்.

ரசிகர்கள் மறுப்பு

ரசிகர்கள் மறுப்பு

இதில் ஐசிசி செய்தது நிர்வாக ரீதியான தவறு. ஆனால், பிசிசிஐ செய்தது ரசிகர்களை பொறுத்தவரை தவறு. இந்திய ரசிகர்கள் ரவி சாஸ்திரியை நல்ல பயிற்சியாளர் என்றோ, சிறந்த கிரிக்கெட் வீரர் என்றோ ஒப்புப் கொள்ள மறுத்து வருகிறார்கள்.

Story first published: Saturday, September 21, 2019, 11:27 [IST]
Other articles published on Sep 21, 2019
English summary
ICC and BCCI slammed by fans for disrespecting legendary Rahul Dravid. ICC mentioned Dravid as a left handed batsmen.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X