For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏங்க நீங்க தோனி ரசிகரா.. இந்த பாட்டை கேட்டீங்களா.. என்னா சாங்குய்யா!

டெல்லி: இதுதான்டா போலீஸ்னு ஒரு படம் வந்தது பார்த்திருக்கிறோம். ஆனால் இதுதான்டா நிஜமான ரசிகன்னு சொல்ல வைத்து விட்டார் நம்ம மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் பிராவோ.

Recommended Video

Dhoni's Heartbreaking Run-Outs

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர்தான் டிவைன் பிராவோ.. தோனியின் வெறித்தனமான ரசிகர். தோனியை தனது சொந்த அண்ணன் போலவே பாவித்து பழகுபவர். தோனி மீது பாசம் காட்டும் வெளிநாட்டு வீரர்களில் இவரும் முக்கியமானவர்.

தோனிக்கு படு ஸ்டைலான பிறந்த நாள் வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் பிராவோ. அனைத்து பிறந்த நாள் வாழ்த்துகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டது இந்த வாழ்த்து.

தோனி பாட்டு

தோனி பாட்டு

அப்படி என்னதான் செய்துள்ளார் என்று கேட்கிறீர்களா.. நீங்க ரொம்ப லேட்டுங்க. தோனிக்காக ஒரு பாட்டையே பாடி வெளியிட்டுள்ளார் பிராவோ.. அவருடைய ஸ்டைலில் படு சூப்பராக இருக்கிறது இந்த பாட்டு. தோனியின் பெயரையும், அவரது ஜெர்சி நம்பரையும் மட்டும் வைத்து இந்தப் பாட்டைப் போட்டுள்ளார் பிராவோ. மேலும் இந்த பாடலுக்கு தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை நினைவுப்படுத்தும்வகையில் ஹெலிகாப்டர் பாடல் என்றும் பேர் வைத்துள்ளார்.

ரசிகர்களின் தேசிய கீதம்

ரசிகர்களின் தேசிய கீதம்

தோனி ரசிகர்களின் தேசிய கீதம் போல மாறி விட்டது இது வெளியான கொஞ்ச நேரத்திலேயே. அப்படி ஒரு சூப்பர் பாட்டாக மாற்றியிருக்கிறார் பிராவோ. எம்எஸ் தோனி. நம்பர் 7 என்று வரும் இந்தப் பாடலில் கங்குலிக்கும் நன்றி சொல்லியுள்ளார் பிராவோ. ஏன் என்றால் 3வது இடத்தில் தோனியை விளையாட அனுமதித்து, அதன் மூலம் அவர் வரலாறு படைக்க வித்திட்டதே கங்குலிதான் என்பதற்காக இந்த நன்றியாம்.

சூப்பர் வீடியோ

அதுபோக தோனியின் டான்ஸும் இடையில் வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் காட்சிகள் சிலவற்றையும் உள்ளே கோர்த்து விட்டிருக்கிறார் பிராவோ..இந்த வீடியோ இப்போது வைரலாகி விட்டது. இந்த வீடியோவில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் எனது வேறு தாயின் வயிற்றில் பிறந்த எனது சகோதரர் தோனிக்காக இந்த வாழ்த்து என்று பிராவோ சொல்லியிருப்பதுதான் தோனி ரசிகர்களை நெகிழ வைத்து விட்டது.

அண்ணன்டா.. தம்பிடா

அண்ணன்டா.. தம்பிடா

பிராவோ உண்மையிலேயே தோனி மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரது கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் தோனியிடமிருந்து தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார் பிராவோ. வாழ்க்கையில் பல விஷயங்களை எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பான பாடங்களும் கூட தோனியிடமிருந்து தனக்கு நிறைய கிடைத்துள்ளதாக முன்பு ஒருமுறை அவர் நெகிழ்ந்து போய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

Story first published: Tuesday, July 7, 2020, 17:19 [IST]
Other articles published on Jul 7, 2020
English summary
West Inides and CSK player DJ Bravo released a birth day song for MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X