For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்குமா சான்ஸ்..? தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா ராஜினாமா..

சென்னை: நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

சேப்பாக்கம் மைதானத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி பாரம்பரியமிக்க கட்டிடம் என்று அந்தஸ்தை பெற்றது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கொரோனா அச்சுறுத்தல்- தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கொரோனா அச்சுறுத்தல்- தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்

ரூபா குருநாத் ராஜினாமா

ரூபா குருநாத் ராஜினாமா

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்று இருந்த ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். அவரது பதவி அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களாலும், சொந்த தொழிலை பார்க்க நேரமில்லை என்று கூறியும் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

அடுத்த தலைவர் யார்?

அடுத்த தலைவர் யார்?

ரூபா குருநாத், முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரை தீர்மானிக்க நாளை அவசர கூட்டம் கூட உள்ளது. இதில் தமிழக அமைச்சர் பொன்முடியின் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவருமான அசோக் சிகாமனி தலைமை தாங்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதில் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் முதலமைச்சரின் மகனுமான ஸ்டாலினுக்கு இந்த சான்ஸ் கிடைக்குமா என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அரசு பொறுப்பில் இருப்பவர்கள், கிரிக்கெட் சங்கம் சார்ந்த பொறுப்பில் இருக்க கூடாது என்று பி.சி.சி.ஐ. விதிகள் உள்ளன. இருப்பினும் அந்த விதிகளை பி.சி.சி.ஐ. பின்பற்றுவதும் இல்லை என தெரிகிறது

45 நாட்கள்

45 நாட்கள்

இதனால், உதயநிதி ஆதரவாளர்கள், அவருக்கு தான் இந்த பொறுப்பு என்று எதிர்பார்த்துள்ளனர். இதே போன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனுக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் புதிய தலைவர் 45 நாட்கள் கழித்து தான் முடிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது

Story first published: Thursday, December 30, 2021, 21:59 [IST]
Other articles published on Dec 30, 2021
English summary
DMK Supporters Believes Udhayanidhi stalin is likely to be next TNCA President உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்குமா சான்ஸ்..? தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா ராஜினாமா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X