For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசான காலத்துல நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பிடிச்சதை செஞ்சோம்... சேர்ந்து செஞ்சோம்

துபாய் : சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியுடன் இணைந்து இருவரும் தங்களுக்கு பிடித்ததை செய்ததாக அணி வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வயதான காலத்தில் மனதிற்கு பிடித்ததை செய்ததாக அவர் தனது கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

அணியில் தீபக் சஹர் இணைந்துள்ள நிலையில், வெளிநாட்டு வீரர் டேவிட் மலன் அணியில் இணைய மாட்டார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 பிசிசிஐ தடை போட்டா பயந்துருவோமா? 48 வயது வீரருக்கு வம்படியாக வாய்ப்பு.. அதிர வைத்த கொல்கத்தா! பிசிசிஐ தடை போட்டா பயந்துருவோமா? 48 வயது வீரருக்கு வம்படியாக வாய்ப்பு.. அதிர வைத்த கொல்கத்தா!

தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்

தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்

யூஏஇயின் துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களில் வரும் 19ம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வரும் 19ம் தேதி முதல் போட்டியில் மோதவுள்ளன.

சிஎஸ்கே சிஇஓ திட்டவட்டம்

சிஎஸ்கே சிஇஓ திட்டவட்டம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குவாரன்டைனில் வைக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் கடந்த சில தினங்களாக பயிற்சி போட்டிகளில் மீண்டும் இணைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு வீரர் டேவிட் மலன் அணியில் இணைய வாய்ப்பில்லை என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

உற்சாகமாக பயிற்சி

உற்சாகமாக பயிற்சி

இந்நிலையில் 39 வயதில், வயதான காலத்தில் தானும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியும் தங்களுக்கு பிடித்ததை செய்ததாக அணியின் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவரும் தோனியும் உற்சாகமாக பயிற்சிப்போட்டிகளில் விளையாடுகின்றனர்.

ருதுராஜ் தவிர்த்தவர்களுக்கு கொரோனா நெகட்டிவ்

ருதுராஜ் தவிர்த்தவர்களுக்கு கொரோனா நெகட்டிவ்

அவர்கள் ஆட்டத்தில் சிறிதும் தொய்வு காணப்படவில்லை. இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் சிறப்பான டி20 கிரிக்கெட் அனுபவத்தை இந்த சீசனில் இவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கடந்த மாதத்தில் கொரோனாவால் சிஎஸ்கே வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் ருதுராஜ் கெய்க்வாட் தவிர்த்த மற்றவர்கள் கொரோனா நெகட்டிவ் அறிவிக்கப்பட்டு தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.

Story first published: Sunday, September 13, 2020, 19:16 [IST]
Other articles published on Sep 13, 2020
English summary
CSK on Friday got a major boost on Friday as pacer Deepak Chahar started training
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X