For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை ஏன் வார்னேவுடன் ஒப்பிடறாங்கன்னு தெரியல... அனில் கும்ப்ளே கேள்வி

மும்பை : ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவுடன் தன்னை தொடர்ந்து ஒப்பிடுவதற்கான காரணம் தனக்கு புரியவில்லை என்று முன்னாள் இந்திய ஸ்பின்னர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜிம்பாப்வே வீரர் பொம்மி ம்பாங்வாவுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய அனில் கும்ப்ளே, இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 2008ல் அனில் கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் சர்வதேச அளவில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னேக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

கோலியின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம்கோலியின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம்

2008ல் ஓய்வு

2008ல் ஓய்வு

இந்திய அணியின் சிறப்பான ஸ்பின்னராக திகழ்ந்த அனில் கும்ப்ளே, கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளே, பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

619 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

619 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் முறையே 800 மற்றும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1999ல் நடைற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை ஒரே நபராக வீழ்த்திய சாதனையும் இங்கிலாந்தின் ஜிம் லேக்கருக்கு அடுத்தபடியாக கும்ப்ளேவிற்கு உள்ளது.

வார்னேவுடன் ஒப்பீடு குறித்து கேள்வி

வார்னேவுடன் ஒப்பீடு குறித்து கேள்வி

இந்நிலையில், முன்னாள் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பொம்மி ம்பாங்வாவுடன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்ட அனில் கும்ப்ளே, தன்னை ஷேன் வார்னேவுடன் ஏன் மற்றவர்கள் ஒப்பிடுகிறார்கள் என்று தனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். வார்னேவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மகிழ்ச்சி அளிக்கிறது

முரளிதரன் மற்றும் வார்னே இருவரும் எந்த பிட்சிலும் எளிதாக பந்துவீசுவார்கள் என்றும் அது தனக்கு கடினமானது என்றும் அனில் கும்ப்ளே மேலும் கூறினார். அவர்கள் இருவரின் ஆட்டத்தை பார்த்து தான் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியது தனக்கு எப்போதும் பெருமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 25, 2020, 16:20 [IST]
Other articles published on Jul 25, 2020
English summary
Warne and Murali could spin the ball on any surface so it became really difficult for me -Kumble
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X