அறிவுரை வேண்டாம், என் வேலையை செய்ய எனக்கு தெரியும்: சொல்கிறார் கோஹ்லி

By

லண்டன்: யாரின் அறிவுரையும் வேண்டாம், என் வேலையை செய்ய எனக்கு தெரியும் என்று கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரரான விராத் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளார். அண்மை காலமாக பேட்டிங்கில் அவர் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நிரூபிக்க

நிரூபிக்க

துவக்கத்தில் உங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை விமர்சகர்களுக்கு நிரூபிக்க முயற்சி செய்வீர்கள். ஆனால் தற்போது தான் மக்களுக்கு எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை.

நான்

நான்

நான் யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்பதால் நான் அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்று இல்லை. என் ஆட்டம் பற்றி நான் என்ன நினைக்கிறேன், என்னிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பது மிகவும் முக்கியம்.

அறிவுரை

அறிவுரை

இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று யாரும் அறிவுரை வழங்காமலே எனக்கே தெரியும். இது பெரிய போட்டி இதில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று யாரும் எனக்கு அறிவுரை வழங்க வேண்டியது இல்லை.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

இங்கிலாந்தில் மட்டும் அல்ல பிற நாடுகளிலும் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். ஏன் என்றால் நான் சிறந்த வீரராக இருக்க விரும்புகிறேன்.

விமர்சகர்கள்

விமர்சகர்கள்

நம் நாட்டில் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் ஒரு வீரர் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஒரு குறிப்பிட்ட போட்டி அல்லது தொடரில் நன்றாக விளையாடாவிட்டால் அவர் விளையாடத் தகுந்தவரா என்று நினைக்கின்றனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

உங்கள் மனம் கூறுவதை செய்தால் அது சரியாகத் தான் இருக்கும். நீங்கள் நினைப்பது சரியே என்ற தன்னம்பிக்கை தேவை. இந்த நம்பிக்கையை நம்முடன் விளையாடும் வீரருக்கும் அளிக்க வேண்டும் என்று கூறினார் கோஹ்லி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cricketer Virat Kohli told that he doesn't need advice from people and he knows his job well.
Story first published: Tuesday, July 1, 2014, 12:55 [IST]
Other articles published on Jul 1, 2014
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X