For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னோட வெற்றிக்காக நான் தோனியை நம்பிக்கிட்டு இல்ல... குல்தீப் யாதவ் திட்டவட்டம்

டெல்லி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலில் இந்திய அணியில் தன்னை மெருகேற்றிக் கொண்டவர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ்.

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் தோனி பங்கேற்காதது போலவே, குல்தீப் யாதவிற்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தன்னுடைய வெற்றிக்காக தான் தோனியை நம்பியிருக்கவில்லை என்றும், யாரிடமும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தனக்கில்லை என்றும் குல்தீவ் தெரிவித்துள்ளார்.

பௌலர்களோட வொர்க்லோட் சரியா கண்காணிக்கப்படுது... அதுதான் அவங்களோட வெற்றிக்கு காரணம்பௌலர்களோட வொர்க்லோட் சரியா கண்காணிக்கப்படுது... அதுதான் அவங்களோட வெற்றிக்கு காரணம்

பௌலிங்கில் தொய்வு

பௌலிங்கில் தொய்வு

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ். தோனியின் விக்கெட் கீப்பிங்கில் இவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு தோனி அணியிலிருந்து விலகியவுடன், இவரது பௌலிங்கிலும் தொய்வு ஏற்பட்டது. இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 60 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடி முறையே, 24, 104 மற்றும் 39 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார்.

டீம் வொர்க் தான்

டீம் வொர்க் தான்

இந்நிலையில், தான் தன்னுடைய வெற்றிக்காக யாரையும் குறிப்பாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை நம்பியிருக்க வில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் தோனி அணியில் இல்லாத நிலையில் தன்னுடைய திறமையை தான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தோனியுடன் இணைந்து டீம் வொர்க்கை மேற்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான டீம் வொர்க்

சிறப்பான டீம் வொர்க்

தோனி தன்னை எப்போதுமே சிறப்பாக வழிநடத்துவார் என்பதை மறுக்க முடியாது. தோனி பௌலர்களை சிறப்பாக எடைபோடுவார் மேலும் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் குறித்தும் தன்னுடைய அனுபவம் மூலம் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். இதை வைத்து அவர் பௌலர்களை சிறப்பாக வழிநடத்துவார். இதெல்லாம் டீம் வொர்க் தான் என்றும் குல்தீப் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள்

முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ், தர்மசாலாவில் கடந்த 2017ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி மோதிய டெஸ்ட் போட்டியின் மூலம் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். தன்னுடைய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர அவர் தவறவில்லை.

Story first published: Wednesday, June 17, 2020, 19:02 [IST]
Other articles published on Jun 17, 2020
English summary
Mahi bhai has always guided me, All of this is teamwork -Kuldeep Yadav
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X