For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின்... ரொம்ப... ரொம்ப தப்பு பண்ணீட்டிங்க... ரொம்ப லேட்டஸ்டா விமர்சித்த போல்ட்

டெல்லி:கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியது முறையானதல்ல என்று டெல்லி அணியில் விளையாடும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் பல நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பஞ்சாப் கேப்டன் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தினார்.

அதில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியதற்கு விமர்சனம் செய்தனர்.

என்ன தொட்ட... நீ கெட்ட....! பாக்சிங் பயிற்சியில் சின்ன தல... வைரல் வீடியோ என்ன தொட்ட... நீ கெட்ட....! பாக்சிங் பயிற்சியில் சின்ன தல... வைரல் வீடியோ

பலரும் கருத்து

பலரும் கருத்து

சில கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லி அணியில் ஆடிவரும் நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியதாவது:

வழக்கமானது தான்

வழக்கமானது தான்

இத்தகைய சுவாரசிய விஷயங்கள் கிரிக்கெட்டில் நடப்பது வழக்கமானது தான். ஐபிஎல்லில் இதுபோன்று ஆச்சரியத்திற்குரிய சம்பவங்கள் நடக்கின்றன. கிரிக்கெட்டை சரியான முறையில் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.

விதிகள் இருக்கின்றன

விதிகள் இருக்கின்றன

அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியது தேவையில்லாத ஒன்று. அவர் பட்லரை அவுட்டாக்கிய முறை விதிகளின்கீழ் இருக்கிறது. ஆனால்.. சரியான ஆட்டத்திற்குரிய முறையல்ல என்று அவர் தெரிவித்தார்.

அஸ்வின் விளக்கம்

அஸ்வின் விளக்கம்

மன்கட் முறையை பயன்படுத்தியதற்காக அஸ்வின் மீது இன்றளவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால்... இது எதிர்பாராத ஒன்று என்று அவரும் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 29, 2019, 14:59 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
Don't really see the need to use Mankad says Delhi Capitals Trent Boult.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X