For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்கிட்ட எந்த மேஜிக்கும் கிடையாது..! ஏதோ என் கடமையை செய்வேன்..! அடக்கமாக சொன்ன அந்த பவுலர்

Recommended Video

Smith floored by Archer| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்

லார்ட்ஸ்: ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமாக இருக்கும் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர், நான் எந்த சாகசத்தையோ, அற்புதத்தையோ செய்வேன் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

Dont expect more from me, will play my natural game says jofra archer

இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ஓவர்கள் தான் வீசினார். அதற்குள் காயம் ஏற்பட போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணி உலக கோப்பையை கைப்பற்ற இவரும் ஒரு காரணமாக விளங்கியவர்.

உலக கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய ஜாப்ரா ஆர்சர் காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. லார்ட்ஸில் 2வது டெஸ்டில் ஜாப்ரா ஆர்சர் அறிமுகம் ஆகிறார். சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர் என்பதால் நிச்சயம் இவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

அப்படி என்ன அவசரம்? 2 நாளைக்கு முன்பே சகோதரப் பாசத்தை கொட்டிய யார்க்கர் மன்னன் பும்ரா! அப்படி என்ன அவசரம்? 2 நாளைக்கு முன்பே சகோதரப் பாசத்தை கொட்டிய யார்க்கர் மன்னன் பும்ரா!

இதுகுறித்து ஆர்ச்சர் கூறி இருப்பதாவது: டெஸ்ட் போட்டிக்கான சிகப்பு பந்தில் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை என்ற விமர்சிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. வெள்ளை பந்தை விட, சிகப்பு பந்தில்தான் அதிகமாக விளையாடியுள்ளேன்.

சசக்ஸ் அணிக்காக கிரிக்கெட்டை தொடங்கும்போது எனது முதல் ஆட்டம் சிகப்பு பந்தில் தான். என்னிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்காதீர்கள் என்று நான் திட்ட வட்டமாக கூறுவேன். அறிமுக டெஸ்ட் போட்டியில், என்ன முடியுமோ, அதை செய்ய முயற்சிப்பேன் என்றார்.

Story first published: Monday, August 19, 2019, 13:06 [IST]
Other articles published on Aug 19, 2019
English summary
Dont expect more from me, will play my natural game says jofra archer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X