For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், கங்குலியை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர் தான் - கௌதம் கம்பீர்!

மும்பை : ராகுல் டிராவிட் குறித்து புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், கங்குலியின் கேப்டன்சி மற்றும் சச்சினின் பேட்டிங்குடன் அவரது திறமையை ஒப்பிட்டு பேசி உள்ளார்.

Recommended Video

Gambhir praises Dravid by comparing Sachin and Ganguly

அவர்கள் இருவரையும் விட ராகுல் டிராவிட் திறமையானவர் என கூறி அதிர வைத்து இருக்கிறார்.

ஆனால், டிராவிட் குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை எனவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கௌதம் கம்பீர்.

அவர் ரிட்டையர் ஆகட்டும்.. விளையாட விடாமல் பிசிசிஐ கிடுக்கிப்பிடி.. வயதான வீரருக்கு நேர்ந்த கதி!அவர் ரிட்டையர் ஆகட்டும்.. விளையாட விடாமல் பிசிசிஐ கிடுக்கிப்பிடி.. வயதான வீரருக்கு நேர்ந்த கதி!

கங்குலி - சச்சின்

கங்குலி - சச்சின்

இந்திய அணியில் சச்சின் நீண்ட காலம் ஆடிய பின் தான் ராகுல் டிராவிட் அறிமுகம் ஆனார். கங்குலியும், அவரும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனார்கள். சச்சின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், கங்குலி சிறந்த கேப்டனாகவும் புகழின் உச்சத்தை அடைந்தனர்.

உயர்ந்த ராகுல் டிராவிட்

உயர்ந்த ராகுல் டிராவிட்

அவர்கள் இருவருக்கும் நிகராக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார் ராகுல் டிராவிட். கேப்டனாக சில ஆண்டுகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார் ராகுல் டிராவிட். ஆனால், இறுதியில் சச்சின், கங்குலியின் புகழை அவர் எட்டவில்லை.

டெஸ்ட் பேட்ஸ்மேன் மட்டும் தானா?

டெஸ்ட் பேட்ஸ்மேன் மட்டும் தானா?

ராகுல் டிராவிட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை தாண்டி இன்று பலரும் அவர் குறித்து பேசுவதில்லை. ஆனால், ஒருநாள் போட்டிகளில் அவர் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். சிறந்த கேப்டன்கள் வரிசையில் கங்குலி, தோனிக்கு இடையே ராகுல் டிராவிட்டுக்கும் உரிய பங்கு உள்ளது.

ஆதங்கம்

ஆதங்கம்

இதைப் பற்றித் தான் கூறி ஆதங்கம் அடைந்துள்ளார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர். அவர் கூறுகையில், நான் கங்குலி கேப்டன்சியில் ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனேன். ராகுல் டிராவிட் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனேன். ராகுல் டிராவிட் கேப்டன்சிக்கு உரிய மதிப்பை நாம் அளிக்காதது துரதிர்ஷ்டம் என்றார்.

அட்டகாசமான கேப்டன்

அட்டகாசமான கேப்டன்

மேலும், நாம் சவுரவ் கங்குலி, தோனி பற்றி பேசுகிறோம். இப்போது விராட் கோலி பற்றி பேசுகிறோம். ஆனால், ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு அட்டகாசமான கேப்டனாக இருந்தார். அவரது ரெக்கார்டை பார்த்தால், அவர் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் மற்றும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தலைவர் என தெரியும் என்றார்.

வெற்றிகள்

வெற்றிகள்

மேலும், நாம் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸில் வென்றோம். தொடர்ந்து 14 அல்லது 15 போட்டிகளில் வெற்றி பெற்றோம் என டிராவிட் கேப்டன்சி குறித்து புகழ்ந்த கௌதம் கம்பீர் அவரது பேட்டிங் குறித்தும் விரிவாக, சச்சினுடன் ஒப்பிட்டு பேசினார்.

அணிக்காக ஆடினார்

அணிக்காக ஆடினார்

ஒரு கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக ஆடி உள்ளார். 3 வது இடத்தில் களமிறங்கினார். அவர் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்தார். அவர் ஒரு ஃபினிஷராகவும் பேட்டிங் செய்தார். அவர் இந்திய அணி என்ன கேட்டதோ, ஒரு கேப்டன் என்ன செய்யச் சொன்னாரோ அவை எல்லாவற்றையும் செய்தார், அதுதான் நாம் விரும்பும் முன்மாதிரி வீரர் என்றார் கம்பீர்.

பெரிய தாக்கம்

பெரிய தாக்கம்

என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். கேப்டனாக சவுரவ் கங்குலி ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதே சமயம், இந்திய கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ராகுல் டிராவிட் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றார் கம்பீர்.

சச்சினுடன் ஒப்பீடு

சச்சினுடன் ஒப்பீடு

சச்சின் டெண்டுல்கரைப் போன்ற ஒருவருடன் அவரது செயல்பாட்டை ஒப்பிட்டு பார்க்க முடியும். ஏனெனில், அவர் வாழ்நாள் முழுவதும் சச்சின் டெண்டுல்கரின் நிழலுக்கு கீழே தான் ஆடினார். ஆனால் இருவரும் ஒரே மாதிரியான தாக்கத்தை தான் ஏற்படுத்தினார்கள் என்று கூறினார் கம்பீர்.

Story first published: Saturday, June 27, 2020, 18:54 [IST]
Other articles published on Jun 27, 2020
English summary
Dravid is more impactful player and leader than Sachin, Ganguly says Gautam Gambhir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X